உலக பிரியாணி தினம்: இந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக பிரியாணி தினமாக கொண்டப்படுகிறது. இந்த வருடம் ஜூலை-2ஆம் தேதியான இன்று அது அனுசரிக்கப்படுகிறது. பிரியாணி என்ற சொல் பாரசீக வார்த்தையான 'பிரியன்' என்பதிலிருந்து உருவானதாகும். 'சமைப்பதற்கு முன் வறுத்த உணவு' என்று இது பொருள்படுகிறது. பிரியாணியின் தோற்றம் இந்த சுவையான உணவு எங்கு தோன்றியது என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. பிரியாணி பெர்சியாவில் தோன்றியது என்றும், முகலாயர்களால் அது இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது என்றும் ஒரு-தரப்பினர் கூறுகின்றனர். இன்னொரு தரப்பினர், அது ஷாஜகானின் மனைவி மும்தாஜின் உத்தரவின்படி முதன்முதலாக தயாரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். தமிழகத்தில் திண்டுக்கல்-தலைப்பாக்கட்டி போன்ற பிரியாணிகள் பிரபலமாக இருந்தாலும் இந்திய அளவில் என்னென்ன பிரியாணிகள் பிரபலம் தெரியுமா?
இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான 4 பிரியாணி வகைகள்
கொல்கத்தா பிரியாணி பொதுவாக, இந்த பிரியாணியில் இறைச்சிக்கு பதிலாக உருளைக்கிழங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. லக்னோ பிரியாணி 'புக்கி' பிரியாணி என்றும் அழைப்படும் இந்த பிரியாணி, 'டம் புக்த்' சமையல் முறையின்படி தயாரிக்கப்படுகிறது. அரிசியையும் பதார்த்தங்களையும் அடுக்குகளாக அடுக்கி ஒரு ஓவெனில் வைத்து இது வேக வைக்கப்படுகிறது. முகலாய் பிரியாணி முகலாய் பிரியாணியும் ஒரு சீல் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டு மெதுவான தீயில் 'டம் புக்த்' முறைப்படியே சமைக்கப்படுகிறது. ஹைதராபாத் பிரியாணி பேரரசர் ஔரங்கசீப் நிஜா-உல்-முல்க்கை ஹைதராபாத்தின் புதிய ஆட்சியாளராக நியமித்த பிறகே இந்த புகழ்பெற்ற ஹைதராபாத் பிரியாணி உருவானது. அவரது சமையல்காரர்கள் மீன், இறால், காடை, மான் மற்றும் முயல் இறைச்சியைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 50 வெவ்வேறு பிராணிகளை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.