NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புரட்டாசி ஸ்பெஷல்: மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புரட்டாசி ஸ்பெஷல்: மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே!
    மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே!

    புரட்டாசி ஸ்பெஷல்: மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே!

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 20, 2023
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    நீங்கள் வெளிநாட்டில் சுற்றுலாவிற்காக சென்றுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். குறிப்பாக மலேஷியாவிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தால், கவலை வேண்டாம்!

    மலேசியா அதன் சுவையான உணவு மற்றும் அனைவரின் சுவைக்கும் ஏற்ற பலவகையான உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது.

    நீங்கள் ஒரு சைவ உணவு உண்பவராக இருந்தால், புரட்டாசி மாதத்தில், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற கொள்கை உடையவராக இருப்பின், உங்களுக்காக, மலேசியாவின் பிரபலமான சைவ உணவு வகைகளை உங்களுக்காக பட்டியலிட்டுளோம்.

    card 2

    வெஜ் மீ கோரெங்

    இது ஒரு பாரம்பரிய மலேசிய உணவு. மீ கோரெங் என்றால் "பொறித்த நூடுல்ஸ்" என பொருள். இந்த உணவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

    இது வறுத்த நூடுல்ஸ் உடன், வெங்காயம், உருளைக்கிழங்கு, மொச்சை, வெள்ளை முட்டைக்கோஸ், பூண்டு போன்ற பல்வேறு காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

    கெட்ச்அப், சோயா சாஸ் மற்றும் இனிப்பு சில்லி சாஸ் ஆகியவற்றின் கலவையான சாஸில் இந்த உணவு சமைக்கப்படுகிறது. இது சம அளவில் இனிப்பு மற்றும் கார சுவை கொண்டிருக்கும்.

    card 3

    அபம் பாலிக்

    Apam balik என்பது மலேசியாவில் உள்ள உள்ளூர் மக்களின் ஒரு பிரபலமான சிற்றுண்டி/இனிப்பு வகை.

    இது வெளியில் மிருதுவாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும்.

    இது பேக்கிங் பவுடர் அல்லது பேக்கிங் சோடா, இனிப்பு சோளம், வறுத்த வேர்க்கடலை மற்றும் வெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

    மாவு தயாரானதும், அது ஒரு சூடான கிரில் மீது ஊற்றப்பட்டு மிருதுவாக இருக்கும் வரை சமைக்கப்படுகிறது.

    கிட்டத்தட்ட இங்கிலிஷ் உணவான ஃவாப்பில்-இன் (Waffle) சுவை போல இருக்கும் இந்த உணவு.

    card 4

    புலட் பங்காங்

    இந்த உணவு, அரிசி மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மலேசியாவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ள உணவு இது. இந்த கலவையானது, வாழை இலைகளில் மூடப்பட்டு, பின்னர் அது நறுமணமாக வரும் வரை திறந்த தீயில் சுடப்படுகிறது. இந்த உணவு மலேசியாவின் ஒவ்வொரு தெரு மூலையிலும் கிடைக்கும்.

    மலேசியன் கறி லக்சாமலேசியன் கறி லக்சா என்பது உள்நாட்டிலிருந்து கிடைக்கும் மசாலா மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு சூப் ஆகும். இது எலுமிச்சை, தேங்காய் பால், கிரீம், எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது அதன் மேலே, டோஃபு, பீன்ஸ், கத்தரிக்காய், முளை பயறு ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

    card 5

    மீ ரெபஸ்

    இது "வேகவைத்த நூடுல்ஸ்" என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இது மலேசியாவில் நீங்கள் சுவைக்க வேண்டிய மற்றொரு சைவ உணவாகும்.

    இந்த நூடுல்ஸ், இனிப்பு உருளைக்கிழங்கு, வேர்க்கடலை மற்றும் பலவிதமான மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்படுகிறது.

    இது ஒரே நேரத்தில் இனிப்பு மற்றும் காரமானதாக இருக்கும்.

    பொதுவாக, மிருதுவாக வதக்கிய வெங்காயம், மொச்சை முளைகள் அல்லது வறுத்த டோஃபு போன்றவற்றுடன் நீங்கள் அதை சாப்பிடலாம்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலேசியா
    உணவு குறிப்புகள்
    உணவு பிரியர்கள்

    சமீபத்திய

    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்

    மலேசியா

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை கடத்தல்
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலகம்
    மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்! பிவி சிந்து
    ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா உலக செய்திகள்

    உணவு குறிப்புகள்

    தரமற்ற குடிநீர் குளிர்பானம் வழங்கினால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்!  தமிழ்நாடு
    உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை!  ஆரோக்கியமான உணவு
    மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியமான உணவு
    உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா? உடல் பருமன்

    உணவு பிரியர்கள்

    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு குஜராத்
    'நெட்ஃபிலிக்ஸ்' நிறுவனம் தொடங்கியிருக்கும் புதிய உணவகத்தில் என்ன ஸ்பெஷல்? நெட்ஃபிலிக்ஸ்
    உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள் உலகம்
    2 நிமிட நூடுல்ஸ் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஆனால் பொறித்த நூடுல்ஸ் தெரியுமா? உணவு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025