நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி உருவான புராணக் கதை தெரியுமா?
நவராத்திரி ஸ்பெஷல்: முன்னொரு காலத்தில் வரமுனி என்ற அசுரன் இருந்தானாம். அதிக தலைக்கனம் கொண்ட அவன், தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற கர்வத்தோடு பூவுலகையும் முனிவர்கள் வாழும் இடங்களையும் சூறையாடி கொண்டிருந்தான். அவனது தொல்லை தாங்க முடியாத அகத்தியரும் பிற முனிவர்களும், அவனை காட்டெருமையாக மாற்றி சபித்துவிட்டனர். இதற்கிடையில், ரம்பன் என்ற இன்னொரு அரக்கன் இருந்தான். அவன் கடும் தவம் புரிந்து, தனக்கு மிகவும் பலசாலியான ஒரு மகன் வேண்டும் என்று அக்னி பகவானிடம் ஒரு வரத்தை பெற்றான். நீ யார் மீது ஆசை கொள்கிறாயோ அவர் மூலம் உனக்கு மிகவும் பலசாலியான மகன் கிடைப்பான் என்று அக்னி பகவான் அவனுக்கு வரத்தை அளித்தார்.
பராசக்தி மகிஷாசுரமர்த்தினியான கதை
இதனையடுத்து, ரம்பன், ஒரு கட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போது காட்டெருமையாக மாறி இருந்த வரமுனி மீது ஆசை கொண்டு, தானும் ஒரு எருமையாக மாறி மகிஷாசூரன் என்ற மகனை பெற்றுகொண்டான். இரண்டு கொடூரமான அரக்கர்களுக்கு பிறந்தவனான மகிஷாசூரன், மூவுலகிலும் மிகப்பெரும் பலசாலியாக திகழ்ந்தான். அது போதாதென்று, பிரம்மனுக்காக கடும் தவம் புரிந்த மகிஷாசூரன், தேர்கள் அசுரர்கள் அல்லாமல், ஒரு கன்னி பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றான். அதன்பிறகு, அவன் அட்டகாசம் அதிகரிக்கவே, அவனை வதம் செய்ய பராசக்தி அவதாரம் எடுத்தாள். 9 நாள் அவள் கொலுவில் இருந்து, 10வது நாள் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தினியானாள். இதை கொண்டாடவே நவராத்திரி அனுசரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.