NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புதுசு கண்ணா புதுசு: 2023இல் வைரலான வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சில
    புதுசு கண்ணா புதுசு: 2023இல் வைரலான வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சில
    வாழ்க்கை

    புதுசு கண்ணா புதுசு: 2023இல் வைரலான வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சில

    எழுதியவர் Venkatalakshmi V
    September 04, 2023 | 07:41 am 1 நிமிட வாசிப்பு
    புதுசு கண்ணா புதுசு: 2023இல் வைரலான வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சில
    வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சில

    'ரிஸ்க் எடுக்கிறது ரிஸ்க் சாப்பிடற மாதிரி' என மனிதர்கள் பலரும் வாழ்க்கையில் பரிசோதனை செய்து மகிழ்கிறார்கள். ஆனால் உணவு பரிசோதனை என்பது சிறிது சிக்கலான சமாச்சாரம். சில நேரங்களில் இந்த பரிசோதனை முயற்சி வெற்றியடையும், பல நேரங்களில் பேரிடரை போல முடியக்கூடும். ஆனாலும் ஆண்டுதோறும், சில வினோதமான உணவுகள் வைரலாவதுண்டு. இது போன்ற வைரல் உணவுகள், சோஷியல் மீடியாவில் லைக்ஸ் பெறுவதற்காக மட்டுமே பெரும்பாலும் செய்யப்படுகிறது. அவற்றை எல்லாம் ருசி பார்க்க மக்கள் வருகிறார்களா என்பது சந்தேகமே. அப்படி, இந்த ஆண்டில், இது வரை, வைரலான சில வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    மாம்பழ தோசை:

    தோசையையும், மாம்பழத்தையும் விரும்பாதவர்களும் உண்டோ? அதன் சுவைக்கு அடிமையாகாதவர் உலகிலே இல்லை எனலாம். ஆனால், அது தனி தனியாக இருந்தால் மட்டுமே. இரண்டு உணவும் ஒன்று சேர்ந்தால்? நினைக்கவே ஒரு மாதிரியாக இல்லை? ஆம், அகமதாபாத்தை சேர்ந்த உணவகம் ஒன்றில் இந்த மாம்பழ தோசையை பயிற்சி செய்துள்ளனர். அதுவும் வைரலாகி வருகிறது. மொறு மொறு தோசை மேல, ஆம்ரஸ் எனப்படும் மாம்பழ கூழை தடவி, பரிமாறுகின்றனர். இது போதாதென்று, அதன் தலையில் சீஸ் துருவி, வறுத்த முந்திரி, திராட்சை போன்ற ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி பரிமாறப்படுகிறது.

    மாம்பழ சீஸ் தோசை

    Instagram post

    A post shared by foodie_eraa on September 3, 2023 at 10:38 pm IST

    ஓரியோ பக்கோடா:

    சில்லென்ற சாரல் மழை, தூவானம் தூறும் நேரம், குளிர் காலம் போன்ற நேரங்களில் சுடச்சுட பக்கோடா சாப்பிட்டால் எப்படி இருக்கும்? தேவாமிர்தமாக தோன்றுமில்லையா? ஆனால், அந்த பக்கோடாவில் முந்திரியோ, வெங்காயமோ கலந்து தானே பார்த்திருப்பீர்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஓரியோ பிஸ்கட்டில் பக்கோடா செய்தால்? காரமான மொறுமொறுப்பான பக்கோடாவை, இனிப்பாக, சாக்லேட் கிரீம் ஃபிளேவரில் இருந்தால்?

    பக்கோடா வேண்டுமா?

    Instagram post

    A post shared by the.fooodie.panda on September 3, 2023 at 8:37 pm IST

    கோல்ட் ட்ரிங்க்ஸ் மேகி

    வியூஸ் கிடைக்க வேண்டும் என்ற வெறிகொண்ட இருவர், கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்த அற்புத ட்ரிங்க் தான் இந்த 'கோல்ட் ட்ரிங்க்ஸ் மேகி'. இருவரும் முதலில் கொதிக்கும் நீரில் ஒரு பெரிய வெண்ணெய் கட்டியை சேர்த்தனர். அதைத் தொடர்ந்து தம்ஸ் அப், ஃபேன்டா, ஸ்டிங் எனர்ஜி டிரிங்க், ஜீரா சோடா என கையில் கிடைத்த அனைத்து பிரபலமான கூல் ட்ரிங்க்ஸ்-ஐயும் அதில் ஊற்றினர். இதனுடன், அவர்கள் மேகியைச் சேர்த்து அதை சமைத்தனர். இதோடு நிற்கவில்லை. இறுதியாக அதை தலையில் சீஸ் லேயர் வேறு. மனதைரியம் கொண்டவர்கள் இதை சாப்பிட முயற்சிக்கலாம்!

    புதுசு கண்ணா புதுசு!

    Instagram post

    A post shared by cursedindianimagess on September 3, 2023 at 10:16 pm IST

    பாவ் பாஜி ஐஸ்கிரீம்

    இந்த லிஸ்டில் இறுதியை இருப்பது டாப் ட்ரெண்டிங் பாவ் பாஜி ஐஸ்கிரீம் ஆகும். சூடான வெண்ணையில் பொறித்த பாவ் பஜ்ஜியை, குளுமையான ஐஸ்கிரீம் போல சாப்பிடலாம் என்ற வினோத சிந்தனை ஒருவருக்கு உதிக்கவே, அப்போது பிறந்தது தான் இந்த புதிய உணவு. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வைரலான ஒரு இன்ஸ்டா பதிவில், ஒரு ஐஸ்கிரீம் விற்பனையாளர், ஐஸ்கிரீம் கவுண்டரில் சில பாவ்களை அடுக்கி வைக்கிறார். பின்னர் அவற்றை பாஜியுடன் எனப்படும் உருளைப்பட்டாணி மசாலாவை அதன் மேலே தடவுகிறார். அதன் பின்னர், அதனுடன், வெங்காயம், பச்சை சட்னி மற்றும் பால் ஆகியவற்றை கலந்து, ஐஸ்கிரீம் ரோல் செய்வது போல தயார் செய்து தருகிறார்!

    பாவ் பாஜி ஐஸ்கிரீம்

    Instagram post

    A post shared by cravings on September 3, 2023 at 10:27 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உணவு குறிப்புகள்
    உணவு பிரியர்கள்

    உணவு குறிப்புகள்

    இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம் உணவு பிரியர்கள்
    இந்திய உணவு மரபுகளும், வேர்களும்: ஒரு பார்வை உணவு பிரியர்கள்
    ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள் ஆரோக்கியம்
    இதுநாள் வரை நீங்கள் ருசித்த இந்திய தெரு உணவுகள் உண்மையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது இல்லை! உணவு பிரியர்கள்

    உணவு பிரியர்கள்

    வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல்  தேசிய ஊட்டச்சத்து வாரம்
    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் உலகம்
    மஹாபாரத காலம் முதல் தற்போது வரை பிரபலமாக இருக்கும் சில உணவுகள் என்ன தெரியுமா? உணவு குறிப்புகள்
    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023