டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள்
நெடுங்காலமாய் பயன்படுத்தப்பட்டு வரும் அழகு சாதன பொருட்களில் ஒன்றான டால்கம் பவுடரை சரும பராமரிப்புக்கு பல விதங்களில் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதை பற்றி இங்கே: ' ஐ லாஷ் ப்ரைமர்'க்கு மாற்று: கண் இமைகள் மீது உபயோகிக்கப்படும், ' ஐ லாஷ் ப்ரைமர்', உங்கள் இமை முடிகளை அடர்த்தியாக காட்ட பயன்படும். ப்ரைமருக்கு மாற்றாக டால்கம் பவுடரை பயன்படுத்தலாம். மஸ்காராவைப் பயன்படுத்துவதற்கு முன், க்யூ-டிப்பை பயன்படுத்தி உங்கள் கண் இமைகளில், சிறிது டால்கம் பவுடரைத் தூவினால், கண் இரப்பைகள் அடர்த்தியாகவும், நீண்டும் தெரியும். தொடைகள் உரசி புண்ணாகுதல்: அதீத வியர்வையினாலோ, வறண்ட சருமத்தினாலோ இந்த பிரச்சனை உண்டாகும். அதை தடுக்க, தொடைகள் மற்றும் அக்குள்கள் இடையில், சிறிது பவுடரை தூவவும்.
வாக்ஸிங் வலியை போக்கும் வலி நிவாரணி
உலர் ஷாம்பூ: தலை முடியில், எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாக இருக்கும் போதும், உங்களால் ஷாம்பு உபயோகிக்க முடியாத போதும், பவுடரை உபயோகிக்கலாம். முடி வேர்களில், சிறிது டால்கம் பவுடரைத் தூவி, நன்கு தேய்க்கவும். இது உச்சந்தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, சுத்தமான மற்றும் மென்மையான முடியை உங்களுக்கு வழங்குகிறது. வாக்ஸிங் வலி நிவாரணி: வாக்ஸிங் செய்யும் போது ஏற்படும் வலிக்கு, ஒரு நல்ல மருந்து இந்த டால்கம் பவுடர். பொதுவாக வாக்ஸிங் செய்யும் போது, சருமத்தில் எரிச்சலையும், சில நேரங்களில் சருமம் சிவந்தும் போகலாம். அதைத் தவிர்க்க, வாக்ஸிங் செய்யும் முன்னர், சிறிது பவுடரை சருமத்தின் மீதி தடவி, அதன் மீது சூடேற்றப்பட்ட மெழுகை இடவும். இதனால் சரும எரிச்சலிலிருந்து தப்பிக்கலாம்.