
இந்த சமையலறை மூலப்பொருள் கொண்டு, பொடுகுக்கு குட்பை சொல்லுங்கள்
செய்தி முன்னோட்டம்
தற்போது பனிக்காலம் வந்துவிட்டது. சரும வறட்சியுடன், பொடுகு தொல்லையும் பலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
பொடுகு, உங்கள் உச்சந்தலையில் உள்ள தோல்களில் படரும், ஒரு வெண்நிற செதில் ஆகும். இது பொதுவாக மலாசீசியா எனப்படும் நுண்ணுயிரியின் தொற்றால் ஏற்படும்.
சிலருக்கு உடல்நல குறைபாடால் கூட உண்டாகலாம். இந்த பொடுகினால், உச்சந்தலையில் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.
இதை தடுக்கவும், தவிர்க்கவும், சரியான முடி பராமரிப்பு அவசியம்.
சந்தையில் பல தயாரிப்புகள் விற்கப்பட்டாலும், இந்த பொடுகை விரட்ட வீட்டிலேயே ஒரு உணவு பொருள் இருத்தால் உங்களுக்கு சுலபம் தானே?
ஆம், நீங்கள் உடல் எடை குறைக்கவும், உங்கள் சாலட்களில் பயன்படுத்தவும் வைத்திருக்கும் ஒரு சூப்பர் பொருள் தான் உங்கள் பொடுகு தொல்லையையும் நீக்க பயன்பட போகிறது.
card 2
ஆப்பிள் சிடார் வினிகர்: உங்கள் பொடுகிற்கான தீர்வு
ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள அமிலத் தன்மை அதை ஒரு சக்திவாய்ந்த பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்தாக ஆக்குகிறது. இது பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கும், எரிச்சலூட்டும் உச்சந்தலையை சரி செய்வதற்கும் உதவும்.
எப்படி பயன்படுத்துவது: ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கப் தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்து, தனியாக வைக்கவும். நீங்கள் வழக்கமான படி தலைக்கு குளித்த பிறகு, அந்த நீர்த்த வினிகர் கலவையை உங்கள் உச்சந்தலையில் சமமாக தடவி, உங்கள் முடி இழைகளில் நன்றாக மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் நன்றாக ஊற வைத்தபின், மீண்டும் வெறும் தண்ணீரில் முடியை அலசவும்.
தொடர்ந்து பயன்படுத்துவதால், பொடுகால் ஏற்பட்ட அரிப்பு மற்றும் வீக்கம் தணிந்து, ஆரோக்கியமான, மிருதுவான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.