உலக நீர்யானை தினம்: இந்த பிரமாண்ட உயிரினங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்
'Hippopotamus', 'Hippo' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நீர்யானைகள், மனித நடவடிக்கைகளாலும், காலநிலை மாற்றத்தாலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த மிருகத்தின், இருப்பை கொண்டாடவும், அவற்றின் அழிவை தடுக்கவும், ஆண்டுதோறும், பிப்ரவரி 15-ஆம் தேதி உலக நீர்யானை தினமாக கொண்டாடப்படுகிறது. நீர்யானைகள் தனித்துவமான மற்றும் நகைச்சுவையான பண்புகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்கள் சில உங்களுக்காக: பூமியில் மூன்றாவது பெரிய பாலூட்டிகளாகும்: யானை மற்றும் வெள்ளை கண்டமிருகத்தை தொடர்ந்து, ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஹிப்போஸ் தான்,பெரிய நிலப்பரப்பு பாலூட்டி விலங்குகள் ஆகும். அவை 3,500 கிலோ எடையும், ஐந்து மீட்டர் நீளமும் கொண்டவை. கூடவே, மணிக்கு 30 கிமீ வேகத்தில் கூடியவை இந்த நீர்யானைகள்.
சிறந்த நீச்சல் வீரரான நீர்யானை
சமூக பிரியர்கள்: குழுவாக, கிட்டத்தட்ட 30 நீர்யானைகள் ஒன்றாக வசிக்கும். முணுமுணுப்பு சத்தம் மற்றும் குறட்டை சத்தம் மூலமாக ஒன்றோடொன்று தொடர்புகொள்ளும். நீர்யானைகள் கூட்டமாக இருந்தாலும், தன்னுடைய பகுதியை கடுமையாக பாதுகாக்கின்றன. சிவப்பு நிறத்தில் வியர்வை: நீர்யானைகளுக்கு வியர்க்காது. ஆனால், அவற்றின் தோலில் இருந்து ஒரு சிவப்புநிற, எண்ணெய்ப் பொருளை சுரக்கின்றன. அது அவைகளை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கின்றன, மற்றும் அவற்றின் தோலை ஈரப்பதமாக வைத்திருக்கின்றன. சிறந்த நீச்சல் வீரர்கள், ஆனால் மிதக்க முடியாது: நீர்யானைகள், தங்கள் மூச்சை ஐந்து நிமிடங்கள் வரை அடக்கி வைத்திருக்கும். வலிமையான நீச்சல் வீரர்களும் கூட. ஆனால், அவைகளால் தண்ணீரில் மிதக்க முடியாது. உடல் எடை காரணமாக, அவற்றால் மிதக்க முடியாது.