டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் பசியை கட்டுப்படுத்த சில ஈசி டிப்ஸ்
உணவு கட்டுப்பாடு அல்லது டயட்டில் இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு மனக்கட்டுப்பாடும் அவசியம். உங்கள் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? ஆனால், சிலவகை உணவுகளை உண்ணவேண்டும் என்ற ஆவல் எழுகிறதா? சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்ற உந்துதலை அடிக்கடி அனுபவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். உங்களுக்கு உதவ சில டிப்ஸ் இதோ: அதிகமான புரதத்தை உட்கொள்ளவும்: புரோட்டீன் என்பது ஒரு மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும். இது நீண்ட நேரத்திற்கு, உங்கள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால், உங்கள் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலும் குறைந்து, எடையும் குறைகிறது. அதனால், நீங்கள் பசியுடன் இருக்கும்போது அதிக கார்ப், அதிக சர்க்கரை கொண்ட தின்பண்டங்களை அடைவதற்கு பதிலாக, அதிக புரதம் கொண்ட தின்பண்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை தேர்ந்தெடுங்கள்
க்ராஷ் டயட்களை தவிர்க்கவும்: கலோரி உட்கொள்ளலை, நீங்கள் மிகவும் கடுமையாக கட்டுப்படுத்தினால், உங்கள் உடல் செயல்பாட்டிற்காக, தசை திசுக்களை உடைக்க நேரிடலாம். அதனால், எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்: குறைந்த கலோரி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நார்சத்து நிரம்பிய தானியங்கள் உட்கொள்ளுவதால், நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்: மன அழுத்தம், கார்டிசோல் என்ற ஹார்மோனை தூண்டும். இது உங்கள் பசியை அதிகரித்து, அதிக கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை உணவுகளுக்கு ஏங்க வைக்கும். மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த, தீவிர உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகா போன்றவற்றை கடைபிடிக்கவும்.