இறுக்கமான அலுவலக சூழ்நிலையை ஃபன்னாக மாற்ற சில வழிகள்
உங்கள் பிடித்த வேலையை செய்வதால் உங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும், குரூப் ஒர்க் செய்யும் போது வேலை செய்வது களைப்பாக தெரியாது என்றும் கூறுவார்கள். ஆனால், உண்மையில், அலுவலக சூழ்நிலையே உங்கள் செயல் திறனை முக்கியமாக தீர்மானிக்கிறது. இறுக்கமான அலுவலக சூழ்நிலையில் அதிக நாட்கள் சிறப்பாக வேலை செய்ய முடியாது என ஆராச்சிகள் கூறுகின்றன. அதனால், உங்கள் அலுவலக சூழ்நிலையை அவ்வப்போது இலகுவாக்குவது முக்கியமாகும். அப்படி, உங்கள் அலுவலகத்தில் இருக்கும் இறுக்கத்தை போக்கி, ஃபன்னாக மாற்ற சில வழிகள். உங்கள் வேலையில் சிறிதளவு விளையாட்டுத்தன்மையைச் சேர்ப்பது, உங்களுக்கு மனஅழுத்தத்தை குறைப்பதோடு, உங்கள் உற்பத்தித்திறனையும் மன உறுதியையும் அதிகரிக்கும்.
மன அழுத்தத்தை போக்க, அலுவலக சூழலை மாற்றுவது அவசியம்
பிரத்யேக விளையாட்டு இடத்தை ஒதுக்கவும்: தற்போது அனைத்து அலுவலங்கங்களும், பணியாளர்கள் இளைப்பாறவும், தங்கள் அழுத்தத்தை போக்கி கொள்ளவும், பிரத்யேக விளையாட்டு இடத்தை ஒதுக்குகிறார்கள். அங்கே வசதியான இருக்கைகள், விளையாட்டு சாதனங்கள், இசை கருவிகள், புத்தங்கள் கொண்டு நிரப்பலாம். குழு விளையாட்டுகளை நடத்தலாம்: புதிதாக உருவாக்கப்பட்ட குழு, அல்லது இறுக்கமான சூழலில் பணிபுரியும் குழுவிற்கு, அவ்வப்போது குழு விளையாட்டுகளை ஊவிக்கலாம். இதன் மூலம், அவர்களுக்குள் இருக்கும் இறுக்கம் மறைந்து, குழு உற்பத்தி திறன் அதிகரிக்கும். படைப்பாற்றல் மற்றும் பரிசோதனையை ஊக்குவிக்கவும்: பணியாளர்களின், படைப்பாற்றல் மற்றும் பரிசோதனையை ஊக்குவிப்பது எப்போதும் சாத்தியப்படாவிட்டாலும், அவ்வப்போது புதிய யோசனைகளை முயற்சி செய்ய, அவர்களுக்கு சுதந்திரம் தர வேண்டும்.