LOADING...
மக்களே உஷார்.. இப்போது சந்தையில் போலி உருளைக்கிழங்குகளும் விற்பனையாகிறதாம்! கண்டறிவது எப்படி?
போலி உருளைக்கிழங்கு, கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை

மக்களே உஷார்.. இப்போது சந்தையில் போலி உருளைக்கிழங்குகளும் விற்பனையாகிறதாம்! கண்டறிவது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2025
08:51 am

செய்தி முன்னோட்டம்

நாட்டின் பல பகுதிகளில் போலி மற்றும் ரசாயனம் கலந்த காய்கறிகள் அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. குறிப்பாக, மக்கள் அதிகம் பயன்படும் உருளைக்கிழங்கும் தற்போது போலி வடிவத்தில் சந்தையில் விற்பனை செய்யப்படும் செய்தி பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் கடந்த அக்டோபரில் நடைபெற்ற சிறப்பு சோதனையில், வண்ணம் பூசப்பட்ட 21 குவிண்டால் போலி உருளைக்கிழங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 56,000 ஆகும். ஒரு குவிண்டாலுக்கு ரூ. 400 லாபம் ஈட்டும் நோக்கில், சில வியாபாரிகள் ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தி உருளைக்கிழங்கு தயாரித்து வந்தது இந்தச் சம்பவம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

உடல்நலம் 

மக்கள் உடல்நலனிற்கு நேரும் அபாயங்கள்

உண்மையான உருளைக்கிழங்கைப் போலவே தோன்றும் இந்த போலி உருளைக்கிழங்குகளில், ஆக்ரி சாயல் மற்றும் பிற டாக்ஸிக் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. நீண்ட காலம் இவற்றை உணவில் சேர்த்தால், மலச்சிக்கல், பசியின்மை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் தோன்றும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சோதனை

போலி உருளைக்கிழங்கை அடையாளம் காணும் 5 எளிய வழிகள்

போலி உருளைக்கிழங்குகளை அடையாளம் காண சில எளிய வழிகள் உள்ளன: 1. வாசனை சோதனை: உண்மையான உருளைக்கிழங்கில் இயற்கையான மண் வாசனை இருக்கும். போலி உருளைக்கிழங்கு ரசாயன வாசனை வீசும். 2. தேய்த்து பாருங்கள்: போலி உருளைக்கிழங்கின் செயற்கை நிறம் கைகளில் அல்லது துணியில் ஒட்டக்கூடும். 3. வெட்டி பாருங்கள்: உண்மையான உருளைக்கிழங்கில் உள்ளே மற்றும் வெளியே ஒரே நிறம் இருக்கும். போலி உருளைக்கிழங்கில் நிற வித்தியாசம் காணப்படும். 4. தண்ணீர் சோதனை: உண்மையான உருளைக்கிழங்கு தண்ணீரில் மூழ்கும். போலியானது மிதக்கும். 5. தோலை பரிசோதிக்கவும்: உண்மையான உருளைக்கிழங்கு கரடுமுரடான தோலுடன் இருக்கும். போலியானது சுத்தமாக, பளபளப்பாக தோன்றும்.