NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அதிகமாக செலவு செய்யும் பழக்கமுடையவரா நீங்கள்? அதை கட்டுப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகமாக செலவு செய்யும் பழக்கமுடையவரா நீங்கள்? அதை கட்டுப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ் 
    அதிகமாக செலவு செய்யும் பழக்கமுடையவரா நீங்கள்? அதை கட்டுப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ்

    அதிகமாக செலவு செய்யும் பழக்கமுடையவரா நீங்கள்? அதை கட்டுப்படுத்த உங்களுக்கு சில டிப்ஸ் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 10, 2023
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிகமாக செலவு செய்வதும், திட்டமிடாமல் செலவழிப்பதும் தவறான பழக்கமாகும்.

    அது ஒரு பெரும் நிதி தவறாக கருதப்படுகிறது.

    அதிகமாக செலவழிப்பது, உங்கள் சேமிப்பு விகிதத்தை கணிசமாக குறைக்கலாம், உங்கள் கடனை உயர்த்த கூடும், அவசர தேவைகளுக்கு, நிதி இன்றி தவிக்க கூடும்.

    இது போன்ற சூழல்களை தவிர்க்க, உங்கள் அதிக செலவு பழக்கத்தை கட்டுப்படுத்த, சில டிப்ஸ் உங்களுக்கு வழங்குகிறோம்.

    card 2

    நிதி இலக்குகளை அமைக்கவும் 

    அடையக்கூடிய இலக்குகளை அமைப்பது, செலவினங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை எளிதாக்குகிறது மற்றும் உங்கள் வெற்றியைக் கண்காணிக்க உதவுகிறது.

    அதிக செலவினங்களைக் கட்டுப்படுத்த, இது ஒரு சக்திவாய்ந்த உந்துதலாக செயல்படுகிறது.

    ஒரு கனவு விடுமுறை, அவசரகால நிதி அல்லது ஓய்வூதியத்திற்காக சேமிப்பது எதுவாக இருந்தாலும், குறிப்பிட்ட நோக்கங்களை வைத்திருப்பது உங்கள் பாதையில் சரியாக பயணிக்க உதவும்.

    card 3

    பட்ஜெட்டை உருவாக்கவும்

    உங்கள் மாதாந்திர செலவினங்களைக் குறிப்பிடும் எழுத்துப்பூர்வ பட்ஜெட்டை உருவாக்கவும்.

    உங்கள் மாதாந்திர வருமானத்தைக் கணக்கிடுவதன் மூலம் தொடங்கவும்.

    பில்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் சேமிப்பு இலக்குகள் போன்ற உங்களின் அனைத்து அத்தியாவசிய செலவுகளையும் பட்டியலிடவும்.

    வாங்குவதற்கு முன், உங்கள் பட்ஜெட்டைச் சரிபார்த்து அவற்றை வாங்க முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    நீங்கள் வாங்கக்கூடிய பொருளின் தேவை பற்றியும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    card 4

    கிரெடிட் கார்டுகளுக்கு வரம்புகளை அமைக்கவும்

    ஒரு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது, பணத்தைக் கணக்கிடுவதை விட எளிமையானது தான்.

    ஆனால் இந்த வசதி அதிக செலவுகளை ஊக்குவிக்கிறது.

    கிரெடிட் கார்டுகளில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உங்களிடம் உள்ளதை விட அதிக பணம் செலவழிப்பதை எளிதாக்குகிறது.

    நீங்கள் கிரெடிட் கார்டுகளை அதிகம் நம்பினால், அதற்கு மாதாந்திர வரம்புகளை வைப்பதைக் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    இது நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர செலவு வரம்பை மீறுவதைத் தடுக்கும்.

    card 5

    உங்கள் செலவைக் கண்காணிக்கவும்

    எவ்வளவு சிறிய வாங்கினாலும், அதை பதிவு செய்யுங்கள். இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு, பட்ஜெட்டின்கிற்கான பல கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.

    இந்த நடைமுறை, உங்கள் பட்ஜெட்டை திட்டமிட்டு, அதிக செலவு செய்யக்கூடிய பகுதிகளை கண்டறிய உதவும்.

    புத்திசாலியான ஷாப்ராக இருங்கள்

    ஷாப்பிங் என்பது உங்களால் முற்றிலும் தவிர்க்க முடியாத ஒரு செயலாக இருந்தால் , அதற்குப் பதிலாக ஸ்மார்ட் ஷாப்பராக மாறுங்கள்.

    அதிகமாகச் செலவழிப்பதைத் தடுப்பதற்கான முதல் படி, சேமிப்பாகும். ஆன்லைனிலும் சரி அல்லது ஆஃப்லைலும் சரி, மலிவான விலையில் பொருட்களைப் பெற பல வழிகள் உள்ளன.

    பல்வேறு பணத்தைச் சேமிக்கும் ஷாப்பிங் ஹேக்குகளைக் கண்டறிந்து புத்திலசாலித்தனமாக செயல்படுங்கள்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிதி மேலாண்மை
    பணம் டிப்ஸ்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    நிதி மேலாண்மை

    இந்த அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் இந்தியா

    பணம் டிப்ஸ்

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை வீட்டு கடன்
    Paytm மூலம் கரண்ட் பில் கட்டுகிறீர்களா? உங்களுக்கு ஒரு நற்செய்தி! சேமிப்பு டிப்ஸ்
    கிடுகிடுவென விலையேறும் தங்கம்! வல்லுநர்கள் கூறுவது என்ன? சேமிப்பு டிப்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025