
குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள்
செய்தி முன்னோட்டம்
குளிர்காலத்தில், சருமம் வறண்டு போகும். குறிப்பாக, உடலின் மற்ற பாகங்களை விட, முகமும், கைகளும் தான் குளிரால் அதிகம் பாதிக்கப்படும்.
குளிர்காலத்தில், உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க, உங்கள் அன்றாட வாழ்க்கையில், பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்:
கையுறைகளை அணியுங்கள்: குளிர்ந்த காற்று மற்றும் அடர்பனி காலம், உங்கள் கைகளை எளிதில் உலர வைக்கும். அதைத் தவிர்க்க, நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம், தவறாமல் கையுறைகளை அணியவும்.
மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்: தினமும் உங்கள் சருமத்திற்கு மாய்ஸ்சரைசரை தடவவும், குறிப்பாக கைகளுக்கு. இது சருமத்தை ஈரப்பதமாக்கவும், ஈரப்பத இழப்பை தடுக்கவும் உதவும்.
குளித்த உடன், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தும் போது, உங்கள் சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.
சரும பாதுகாப்பு
எக்ஸ்ஃபோலியேட் செய்வதை வடிக்கையாக்குங்கள்
குளிப்பதற்கு முன் எண்ணெய்: பனிக்காலத்தில், பெரும்பாலனவர்கள் குளிக்க வெந்நீர் பயன்படுத்துவர்கள். எனினும், அதீத வெந்நீர் பயன்பாடு, வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கும். அதை தடுக்க, குளிப்பதற்கு முன்னர், உங்கள் சருமத்தில், ஏதேனும் சருமப்பாதுகாப்பு எண்ணெய் தடவி, பின்னர் குளிக்கவும். இதனால், சருமம் வறட்சி அடையாது.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்: வெளியே செல்லும் போது, வெயிலில் வெளிப்படும் சரும பாகங்களுக்கு, தவறாமல் சன்ஸ்கிரீனை பயன்படுத்தவும்.
எக்ஸ்ஃபோலியேட்: சருமத்தில் தேங்கியுள்ள, இறந்த சரும செல்களை அகற்றுதல் அவசியம். இந்த இறந்த செல்களை நீக்குவதன் மூலம், உங்கள் சருமம், ஈரப்பதத்தை உறிஞ்சுவது எளிதாகிறது.
வீட்டிலுள்ள பொருட்கள் மூலமாகவே சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யலாம்.
ஓட்ஸ், க்ரீன் டீ, இலவங்கப்பட்டை தூள், அரைத்த பாதாம் மற்றும் தயிர் போன்றவை சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டடர்களாக செயல்படும்.