குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பைத் தடுக்க 4 வாழ்க்கை முறை மாற்றங்கள்
சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, குளிர் காலத்தில் அதிகம் மாரடைப்பு ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளது. குளிர்கால தட்ப வெப்ப நிலை, ரத்தநாளங்களை சுருங்கச் செய்கிறது. இதனால் இதயத்திற்கான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டம் பாதிக்கப்பட்டு, அடைப்புகள் ஏற்படலாம். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் உண்டாவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. அதை தடுப்பதற்கான சில வாழ்க்கை முறை மாற்றங்கள் இங்கே. தினசரி உடற்பயிற்சி: குளிர்காலத்தில் தினசரி உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். காலையிலோ, மாலையிலோ, சூரிய வெளிச்சம் படும்படி, உடற்பயிற்சியை தொடர வேண்டும். அதிக உப்பை தவிர்க்கவும்: எப்பொழுதுமே உப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். குறிப்பாக, நொறுக்கு தீனிகளில், உப்பு அளவு அதிகம் இருக்கும். அதை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
உப்பும், சர்க்கரையும் கட்டுக்குள் இருக்க வேண்டும்
உப்பை கண்கணித்து, கட்டுக்குள் வைத்திருந்தால், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதிக இனிப்பு உணவை தவிர்க்கவும்: குளிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய அடுத்த விஷயம், அதீத இனிப்பை உணவில் சேர்ப்பது. உப்பும், சர்க்கரையும் உடலில் அதிகம் சேரும் போது, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மது வேண்டாம்: கேளிக்கை கொண்டாட்டங்களின் போது, மது அருந்துதல் தற்போது வாடிக்கையாகி விட்டது. அரித்மியா உட்பட பல விதமான பிரச்சினைகளுக்கு ஆல்கஹால் முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் உடல் நலத்தை பாதித்து, கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே உடல் நலத்தை காக்க, மதுவை தவிருங்கள்.