ஹாப்பி ஃபீட்: இந்த எளிய பாத பராமரிப்பு குறிப்புகள் மூலம் உங்கள் பாத அழகை மேம்படுத்துங்கள்
செய்தி முன்னோட்டம்
காலநிலை மாற்றங்கள் சருமத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.
குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் சரும பாதுகாப்பு அவசியம்.
மழைகாலத்தில் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
அதனால் உங்கள் உடலை பாதுகாப்பை வைத்திருத்தல் அவசியம்.
அதே நேரத்தில், சருமத்தை பாதுகாப்பதும் அவசியமாகிறது.
வறண்ட சருமம் உங்களுக்கு பொலிவிழந்த தோற்றத்தை தரக்கூடும்.
உங்கள் உடல் ஆரோகியத்தை முதலில் வெளிக்காட்டுவது சருமத்தின் மூலமாக தான்.
உங்கள் பாதங்கள், நகங்கள், பற்கள் என உங்கள் ஆரோக்கியத்தை உங்களுக்கு முன்கூட்டிய உணர்த்த கூடிய முக்கிய உடற்பாகங்களை பாதுகாப்பது அவசியம்.
அந்த வகையில் இந்த கட்டுரையில் உங்கள் பாதங்களை எப்படி அழகாக பேணுவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பாத பராமரிப்பு
பாத பராமரிப்பு குறிப்புகள்
நமது பாத பராமரிப்பு வழக்கத்தில் முறையான மாய்ஸ்சரைசேஷன் சேர்த்துக்கொள்வது நன்மை பயப்பது மட்டுமல்ல அத்தியாவசியமானது.
அதனால் கரடுமுரடான மற்றும் சேதமடைந்த சருமத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீரேற்றம் மற்றும் குணப்படுத்துவதற்கான முக்கிய பொருட்கள்: நெய், ஷியா பட்டர், கிளிசரின், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற மூல பொருட்கள் சருமத்தின் பொலிவிற்கு முக்கியம்.
இந்த பொருட்கள் தீவிர நீரேற்றத்தை வழங்கி, சரும மீளுருவாக்கத்திற்கு ஊக்குவிக்கின்றன.
பாதங்களை ஸ்க்ரப்பிங் செய்வதும் அத்தியாவசியமான வழக்கமாக கொள்ளுங்கள்.
மென்மையான ஸ்க்ரப்பிங் மூலம் இறந்த சரும செல்கள் தொடர்ந்து குவிவதை தவிர்க்கலாம்.
நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட தேன், ரோஸ் வாட்டர் மற்றும் சர்க்கரை கலந்த கலவையைப் பயன்படுத்தி இந்த ஸ்க்ரப்பிங் செய்யலாம்.