Dissociative Identity Disorder தினம்: இந்த நோயை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கிய தகவல்கள்
இந்த Dissociative identity disorder என்பது, ஒரு மனிதனுக்கு ஏற்படும், அடையாள கோளாறாகும். ஆங்கிலத்தில் சுருக்கமாக, D.I.D எனக்குறிப்பிடுகிறார்கள். இந்த வகை நோயால் பாதிக்கப்படும் நபர்கள், அவர்களின் உடலில் பல ஆளுமைகள் வாழ்வது போல் உணரலாம். இந்த ஆளுமைகளுக்கு வெவ்வேறு பெயர்கள், வயது, பாலினம் மற்றும் தோற்றம் இருக்கலாம். இந்த வகை கோளாறு பற்றி மக்களிடத்தில் இன்னும் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்த தினம் கடைபிடிக்க படுகிறது. இந்த நாளில், இந்த நோயை பற்றி முகாம்களும், கருத்தரங்குகளும், விழிப்புணர்வு பாதாகைகளும் ஏற்பாடு செய்து, மக்களுக்கு, இதை பற்றி மேலும் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள் மருத்துவர்கள். இந்த கோளாறின் அறிகுறிகள், பெரும்பாலும் ஏதேனும் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்விற்கு பிறகு தோன்றும்.
D.I.D-யின் அறிகுறிகள்
அறிகுறிகள்: குறிப்பிட்ட நேரத்தில் நினைவாற்றல் இழப்பு, உடலுக்கு வெளியே அனுபவங்கள், மனச்சோர்வு, பதட்டம் அல்லது தற்கொலை எண்ணங்கள், பற்றின்மை உணர்வு மற்றும் சுய-அடையாளமின்மை ஆகியவை இதன் அறிகுறிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. D.I.D பற்றி சில தகவல்கள்: ஆண்களை விட பெண்களுக்கு தான் D.I.D பாதிப்பு அதிகம் உள்ளது. இது, 'விலகல்' கோளாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, இது ஆளுமைக் கோளாறு (Personality disorder) அல்ல. இவ்வகை கோளாறு, பரவலாக இந்திய மக்களில் 1% முதல் 3% வரை காணப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. D.I.D உள்ளவர்கள், சில நேரங்களில் அம்னீஷியாவால் பாதிக்கப்படலாம். கடந்த காலத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அல்லது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை மறக்க நேரிடலாம்.