வீடு தேடுகிறீர்களா? ஒரு நல்ல இடத்தை எவ்வாறு தேர்வு செய்வது?
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்கு செல்ல திட்டமிட்டால், உங்கள் பட்ஜெட்டை கொண்டு தேடுவது மட்டும் போதாது. சரியான சுற்றுப்புறத்தை தேர்வு செய்வதும் அதைவிட முக்கியமானது. அந்த வகையில், ஒரு புதிய இருப்பிடத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது பல்வேறு காரணிகளை உள்ளடக்கியதாகும். உங்கள் முன்னுரிமைகளை வரையறுத்து, அதற்கேற்ப இடங்களை முழுமையாக ஆய்வு செய்து தேர்வு செய்வதன் மூலம், இணக்கமான மற்றும் நிறைவான வாழ்க்கை அனுபவத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறீர்கள். நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில அளவீடுகள் உங்கள் பார்வைக்கு இங்கே உள்ளன.
காலி மனைகள்
பூட்டிய வீடுகள் மற்றும் காலி இடங்கள் நிறைந்த பகுதி உங்கள் புதிய வீடு அருகே இருந்தால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள், அந்த ஏரியாவின் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் சொத்து மதிப்புகள் வீழ்ச்சியடைவதால், வீழ்ச்சியடைந்து வரும் நகரத்தைக் குறிக்கலாம். அங்கே வீடு வாங்குவதிலும், வாடகைக்கு தங்குவதாலும், உங்கள் அருகாமையில் உங்களுக்கு பெரிய வசதிகள் இருக்காது. மேலும் எதற்காகவும் தொலைவாக பயணிக்க வேண்டியிருக்கும் என்றும் இது குறிக்கலாம்.
பயண தூரம்
நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தால், உங்கள் வீட்டிலிருந்து தூரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். நீங்கள் வாகனம் ஓட்ட விரும்பவில்லை என்றால், பேருந்துகள், உள்ளூர் ரயில்கள் அல்லது மெட்ரோ போன்ற பிற போக்குவரத்து வழிகள் உங்கள் புதிய வீட்டின் அருகே இருக்கிறதா என்பதை கவனியுங்கள். கடைகள், பூங்காக்கள், பள்ளிகள் போன்றவை நீங்கள் வேலை செய்யும் இடம் போன்றவை உங்கள் அருகாமையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் பயண நேரம் மற்றும் பொதுப் போக்குவரத்தை அணுகக்கூடிய தூரம் பற்றியும் சிந்தியுங்கள்.
பொழுதுபோக்கு வசதிகள்
அக்கம்பக்கத்தில் உங்கள் பொழுதுபோக்கிற்காக ஏதேனும் வசதிகள் உள்ளதா என்பதை அராயுங்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் உங்களால் நாள் முழுவதும் வீட்டிற்குள் அடைபட்டு கிடைக்க முடியாது அல்லவா? அதனால், உங்கள் விருப்பமான பொழுதுபோக்கிற்காக இடங்களை தேர்வு செய்து, அவை உங்கள் வீட்டின் அருகே உள்ளதா என்பதை பார்க்கவும். உதாரணமாக வாக்கிங், ஜாகிங் செல்ல இடங்கள், நீச்சல் குளம் அல்லது ஜிம்மாக கூட இருக்கலாம்.
அண்டை வீட்டார்
நீங்கள் தனியாக தங்குபவராக இருந்தாலோ, அல்லது வீட்டில் வயதானவர்களை விட்டுவிட்டு வேலைக்கு செல்பவராக இருந்தாலோ, உங்கள் அண்டை வீட்டாரின் துணை மிகவும் முக்கியம். ஏதேனும் அவசரத்திற்கு அவர்கள் அணுகக்கூடியவர்களாக இருக்கவேண்டும். மாறாக அதுவும் பூட்டப்பட்ட வீடாக இருந்தால், சற்றே யோசிக்க வேண்டிய விஷயம். உங்கள் தெருவில் இருக்கும் குப்பை தொட்டி அருகே பார்த்தாலே தெரிந்து விடும். அங்கே குடும்பங்கள் குடி உள்ளனவா அல்லது, சமூக விரோதிகள் வசிக்கும் இடமா என்று. அதை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்
செல்லப்பிராணி விதிகளை சரிபார்க்கவும்
உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால் , நீங்கள் குடிபோகவுள்ள வீடு/ அபார்ட்மெண்ட் செல்லப்பிராணிகளுக்கு உகந்ததா என்பதைக் கண்டறியவும். சில வாடகை வீடுகள் அவர்களை உள்ளே அனுமதிக்காது அல்லது அவற்றை உங்கள் வீட்டில் வைத்திருக்க அதிக பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கலாம். உங்கள் செல்லப்பிராணிகள் அவற்றின் புதிய சூழலில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, நீங்கள் சில வழிகாட்டுதல்களை உறுதிசெய்யவும்.