Page Loader
உங்களுக்கு சுகர் இருக்கிறதா? தவறாமல் இந்த உணவுகளை உண்ணுங்கள்
உங்களுக்கு சுகர் இருக்கிறதா? தவறாமல் இந்த உணவுகளை உண்ணுங்கள்

உங்களுக்கு சுகர் இருக்கிறதா? தவறாமல் இந்த உணவுகளை உண்ணுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 11, 2024
11:34 am

செய்தி முன்னோட்டம்

நீரழிவு நோய் என்றழைக்கப்படும் டையபிடிஸ் நோயால், தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முற்காலத்தில் பணக்கார நோய் என இது அழைக்கப்பட்டு வந்தது. காரணம், அப்போது நீரழிவு நோய்க்கான மருந்துகள் கிடைப்பது அரிதாக இருந்தது மட்டுமின்றி, அதை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லாமல் இருந்தது. நீரழிவு நோய் என்பது எந்த காரணத்தினாலும் வரக்கூடும். போதிய உடற்பயிற்சி இல்லாமை, உணவு பழக்கங்கள், வாழ்க்கை நடைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் பரம்பரை போன்ற பல காரணங்களால் நீரழிவு ஏற்படக்கூடும். சரி, இதை கட்டுக்குள் வைக்க மருந்துகளை தாண்டி, சில உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என தற்போது மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

card 2

நீரழிவுக்கான உணவுகள் 

பாகற்காய்: பாகற்காயின் இலையின் சாரை எடுத்து, அதனுடன் பெருங்காய பொடி கலந்து குடிக்கவேண்டும் வெந்தய கீரை: வெந்தய கீரையில் உள்ள நார்சத்து, உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது கறிவேப்பிலை: இன்சுலின் சுரப்பை சீராக்க உதவுகிறது. அதனால் தினந்தோறும் இதை சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது வேப்பிலை: வேப்பிலையின் சாறு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் துளசி: இவற்றில் உள்ள மருத்துவ குணங்கள், சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது கொத்தமல்லி: இதில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால், உங்களின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்