உலகின் தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்களில் இடம்பெற்ற சென்னை!
TasteAtlas, பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டியாகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் உணவுகளை வரிசைப்படுத்தும். அதன் 2024/25 உலக உணவு விருதுகளை அறிவித்துள்ளது. அதில் டேஸ்ட்அட்லஸ் படி, இந்திய உணவு வகைகள் 12வது இடத்தைப் பிடித்திருந்தாலும், பல இந்திய உணவுகள் உலகின் 100 சிறந்த உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தரவரிசைப்படி முர்க் மக்கானி 29வது இடத்திலும், ஹைதராபாத் பிரியாணி 31வது இடத்திலும் உள்ளது. டாப் 100 இடங்களை பிடித்த மற்ற இந்திய உணவுகள்: அமிர்தசாரி குல்ச்சா, பட்டர் கார்லிக் நான், முர்க் மக்கானி மற்றும் ஹைதராபாத் பிரியாணி போன்ற இந்திய உணவுகளும் டேஸ்ட்அட்லஸ் பட்டியலில் இடம்பிடித்திருந்தது.
சிறந்த உணவுகள்
உலகின் 100 சிறந்த கியூஸைன்
தலைசிறந்த உணவுகள் வழங்கும் நகரங்கள்
இந்திய உணவு வகைகள் உலகளவில் சிறந்த உணவு வகைகளை கொண்டுள்ளது என 12 ஆம் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல தலைசிறந்த உணவுகளை வழங்கும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மும்பை 5ஆம் இடத்தில் உள்ளது. அதேபோல புது டெல்லி, அம்ரிதசரஸ், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னையும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சென்னையில் குறிப்பாக தலைசிறந்த உணவுகளாக இட்லி, தோசை, சாம்பார், மசாலா தோசை, சக்கரை பொங்கல், தேங்காய் சட்னி, முறுக்கு, போண்டா உள்ளிட்டவை சிறந்த உணவாக பட்டியலிடப்பட்டுள்ளன