உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!
சில நேரங்களில், அதிக மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாகும். மேலும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறும். உலகளவில் 30-79 வயதுடைய 1.28 பில்லியன் பெரியவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரி அளவில் இருக்கும் ப்ளட் பிரஷர், அசாதாரணமான அளவிற்கு உயரும் போது உயர் இரத்த அழுத்தம் அதாவது பிபி ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அதிக உயர் இரத்த அழுத்த அளவு என்பது, ரத்த அழுத்ததின் அளவு 130/80 mm Hg அல்லது 140/90 mm Hg க்கும் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்
சில நேரங்களில் தூக்கமின்மையால் ஏற்படும் தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் & மூச்சுத் திணறல் ஆகியவை உயர் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாகும். உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு அரித்மியா அதாவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஏற்படலாம். மூச்சுத் திணறல் காரணமாக மார்பு வலியும் ஏற்படும். மூளை, இதயம், சிறுநீரகங்கள் & இரத்த நாளங்களை சேதப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்துகிறது. அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானது. இது பக்கவாதம், மாரடைப்பு, இதய செயலிழப்பு & சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வீட்டில் இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது அவசியம். சமச்சீரான உணவு எடுத்துக்கொள்வது எடையைப் பராமரிப்பது உடற்பயிற்சி செய்வது உயர் ரத்த அழுத்தத்தின் அபாயங்களை குறைக்க உதவுகிறது.