உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்
உடலின் ஆரோக்கியத்திற்கும், எலும்புகளின் பலத்திற்கும் முக்கியமான சத்தாக கருதப்படுவது கால்சியம். வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுகளின் பழக்க வழக்கங்கள், வயது, மரபணு போன்றவற்றால் கால்சியம் குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி, உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டுள்ளது என எப்படி தெரிந்து கொள்வது? உங்கள் உடலே, சில அறிகுறிகளின் மூலம் கால்சியம் குறைபாட்டை உணர்த்தும். அவை: உடல் சோர்வு: அடிக்கடி உடல் சோர்வடைகிறதா? அதீத களைப்பாக உணர்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அதிகமாக சோர்வாக உணர்வதுதான், உடல் பலவீனமாக உணருவீர்கள். அதோடு சில நேரங்களில் மயக்கமும், தலை சுற்றலும் ஏற்படலாம்.
அதீத கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் உடைப்படவும் வாய்ப்புள்ளது
சுளுக்கு: கால்சியம் குறைபாடு இருந்தால், உங்களுக்கு அவ்வப்போது தசை பிடிப்பு உண்டாகும். சில நேரங்களில் அது சதைகளில் வலியாக மாறக்கூடும். ஓஸ்டோபோரோசிஸ்: நீடித்த கால்சியம் குறைபாடு, ஓஸ்டோபோரோசிஸ் நிலைக்கு தள்ளிவிடும். அதாவது கை, கால் விரல்கள் நெளிந்து காணப்படும் நிலை. அது அதிகரிக்கும் போது, எலும்புகள் அடர்த்தி குறைந்து உடைப்படவும் வாய்ப்புள்ளது. வறண்ட சருமம்: கால்சியம் குறைபாடு இருந்தால், சருமம் வறட்சி அடையும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதோடு முடியும் அதிகமாக கொட்டும் என கூறுகிறார்கள். ஈறுகளில் ரத்தம்: கால்சியம் குறைபாடு ஏற்படும் போது, பல் வலி, பற்கூச்சம், ஈறுகளில் ரத்தம் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் பற்கள் பாதியாக உடையக்கூடும்.