கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. SARS கொரோனா வைரஸ் தொற்று போலவே, இந்த மாறுபட்ட வைரஸ் தொற்றும், நுரையீரல் செல்களை பாதிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
நோய் கிருமி, வாய் மற்றும் மூக்கு வழியாக உடலில் நுழைந்து நுரையீரலில் உள்ள அல்வியோலியை எரித்து, ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைத் தடுக்கிறது. அதனால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ரத்த ஓட்டமும் குறைந்து, நாளடைவில் செயலிழந்து போகும்.
ஏற்கனவே மருத்துவர்கள் குறிப்பிட்டதை போல, கொரோனா நோய் தொற்று, கோமார்பிட் நிலைகளில் உள்ள நோயாளிகளையே அதிகம் பாதிக்கும்.
அதாவது, நீரழிவு நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கு, கோவிட் தொற்று ஏற்பட்டால், குணப்படுத்துவது சிரமம் என கூறினர்.
card 2
கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு நீரழிவு நோய்
பிரிட்டிஷ் கொலம்பியா நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் வான்கூவரில் உள்ள செயின்ட் பால் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், SARS-Cov-2 நோய்த்தொற்றிற்க்கும், புதிதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டறிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
அதில், SARS-CoV-2 தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நீரிழிவு நோயின் ஆபத்து உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ், பரவ ஆரம்பித்து, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் விளைவுகள் இன்றும் தொடர்கிறது என ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.
அதாவது, வாழ்க்கை முறை மாற்றங்களாலும், பரம்பரையினாலும், நீரழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பவர்களுக்கு, கோவிட் தொற்று ஏற்பட்டால், அவர்களை நிச்சயமாக, டைப் 1 அல்லது டைப் 2 நீரழிவு நோய் பாதிக்கிறது என தெரியவருகிறது.