உங்கள் நோய் அறிகுறிகள் பற்றி கூகுள் செய்பவரா நீங்கள்? அது தவறான பழக்கம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்
தற்போது இருக்கும் டிஜிட்டல் யுகத்தில், கையடக்கத்திலேயே அனைத்தும் கிடைத்துவிடுகிறது. அனைத்து விதமான கேள்விகளுக்கு பதில்களும் இணையத்தில், அதிலும் பிரபல தேடுதளமான கூகிளில் உள்ளது. அதனால், பலர், தங்களுக்கு ஏற்படும் சின்ன சின்ன சந்தேகங்களுக்கும், குறிப்பாக உடல்நிலை சரியில்லாமல் போனால், அதன் அறிகுறிகளை கூகிளில் சரிபார்ப்பதுண்டு. ஆனால், நோய் அறிகுறிகளை கூகிளில் தேடுவதை நிறுத்தவேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கூகிள் தேடல் உங்களை தவறான பாதையில் கொண்டுவிடலாம்: உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து, நீங்கள் கூகிளில் தேடும்போது, அது பல நேரங்களில் தவறான முடிவுகளை காட்டிவிட வாய்ப்புள்ளது. அப்படியே கூகிள் உங்களுக்கு தீவிர நோய் இருப்பதாக கண்டறிந்தாலும், அதை மருத்துவர்கள் சோதனை செய்து உறுதி செய்யவேண்டும். மாறாக 5நிமிட கூகிள் தேடல் கூடாது
கூகிள் தேடுவதால் உங்கள் பீதி தான் அதிகரிக்கும்
ஆன்லைன் தகவல்களின் உண்மைத்தன்மை: இணையத்தில் பரவி கிடைக்கும் செய்திக்கு உண்மைத்தன்மை கிடையாது. யார் வேண்டுமானாலும், இணையத்தில் பதிவேற்றலாம். சில தரமான இயங்குதளங்கள் இருந்தாலும், போலியான மற்றும் தவறான தளங்களின் செய்திக்கு நீங்கள் இரையாக கூடிய வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பிட்ட அறிகுறிகளுக்கான, பொதுவான முடிவுகளே உங்களுக்கு காண்பிக்கப்படுகிறது: இணையத்தில் தேடும்போது, குறிப்பிட்ட ஒரு அறிகுறியின், சாத்தியமான, பொதுவான முடிவுகளே உங்களுக்கு காண்பிக்கப்படும். உதாரணமாக ஒற்றை தலைவலியின் காரணத்தை தேடினால், மூளைக் கட்டி, உயர் இரத்த அழுத்தம் அல்லது பக்கவாதம் போன்றவற்றால் அவதிப்படுவதால் உங்களுக்கு தலைவலி இருக்கலாம் என காட்டும். மருத்துவர்கள் உதவியை நாடுங்கள்: சம்மந்தப்பட்ட வியாதிக்கும் அதன் அறிகுறிகளும் தேவையான ஆராய்ச்சிகள் செய்து, அதைபற்றி பல வருடங்களாக படித்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை நம்புங்கள்.