Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்!
உலகெங்கும் பயணித்து கொண்டே, உங்கள் வேலையையும் தொடர ஆசையா? ஆங்கிலத்தில், உங்களை 'டிஜிட்டல் நோமாட்' என்று அழைப்பர். உங்களுக்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சில வேலைகள் இதோ: கன்டென்ட் எழுத்தாளர்: எழுதுவதற்கு, அலுவலக செட்டப் தேவைப்படாது. எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். டிஜிட்டல் உலகில், ஒரு முக்கிய பணியாக இந்த கன்டென்ட் எழுத்தாளர் பணி கருதப்படுகிறது. சமூக ஊடக மேலாளர்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனேக மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த சமூக ஊடகம். அதிகரித்து வரும் ஈ-காமர்ஸ் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டால், பிராண்டுகள், சமூக ஊடகங்கள் வழியாக, மக்கள் மத்தியில் தங்கள் இருப்பை விரிவுபடுத்த முயல்கின்றன. அதனால், சமூக ஊடக மேலாளர்களின் தேவை, முன்பை விட அதிகமாகவே உள்ளது.
அதிக வேலை வாய்ப்புள்ள வெப் டெவலப்பர் பணி
கிராபிக் டிசைனர்: இந்த டிஜிட்டல் யுகத்தில், கிராபிக் வடிவமைப்பாளர்களுக்கு, முன்பை விட இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. எழுதுவதைப் போலவே, கிராஃபிக் டிசைனிங் வேலைகளும் ஏராளமாக உள்ளன. இந்த வேலைக்கு படைப்பாற்றலுடன், கிராஃபிக் வடிவமைப்பில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இணையம்/ஆப் டெவலப்பர்: இ-காமர்ஸ் வளர்ச்சியுடன், இணையம் அல்லது செயலிகள் டெவலப்பர்களுக்கான தேவை அதிவேகமாக உயர்ந்துள்ளது. வணிகங்களுக்கு, முன்னெப்போதையும் விட டெவலப்பர்கள் தேவைப்படுவதால், அதற்கான தகுதிகளை வளர்த்து கொண்டால், வேலை நிச்சயம். புகைப்படக்கலைஞர்: பொழுதுபோக்குக்காக கேமராவை தூக்குபவரா நீங்கள்? அதையே ஒரு தொழிலாக செய்யலாம். தற்போது இணையதளங்களை அழகூட்ட, அழகிய புகைப்படங்களும் தேவை. கேமரா லென்ஸ்கள் மூலம் நீங்கள் காட்டும் அழகியலுக்கு ஏற்ப, நீங்கள் விரும்பத்தக்க புகைப்படக்கலைஞராக, நிச்சயம் மாறலாம்.