உங்கள் நண்பர்களுக்கு பரிசளிக்க கூடிய சில சூப்பர் கிஃப்ட்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஆறறிவு கொண்ட மனிதன் முதல் ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகள் வரை, அனைத்து உயிர்களையும் பிணைக்கும் ஒரு உன்னதமான உறவு நட்பு.
ஒருவர்பால் கொள்ளும் அளவில்லாத பிரியம், எதையும் எதிர்பார்க்காமல், எப்போதும் துணை நிற்பது நட்புறவு தான்.
'தோள் சாய ஒரு தோழன்' இருந்தால் நீங்கள் எப்போதுமே வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!
அந்த அழகிய உறவை ஒரு வாரத்திற்கு கொண்டாட நாங்கள் உங்களுக்கு பல ஐடியாக்களை வழங்கி வருகிறோம். நண்பர்களோடு சேர்ந்து பயணிக்க ஏதுவான இடங்கள் தொடங்கி, பழைய நட்பை புதுப்பிக்க சில யோசனைகள் வரை பல.
இன்று உங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் நட்பை அங்கீகரிக்கும் வகையில் என்னென்ன பரிசுகளை வழங்கி அசத்தலாம் என்பது குறித்து சில டிப்ஸ் வழங்கவுள்ளோம்!
card 2
கைவினை பொருட்களும், தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகளும்
தனிப்பயனாக்கப்பட்ட கீ செயின்: தற்போது சந்தையில் மலிவாகவும், உடனடியாகவும் கிடைக்கக்கூடிய ஒரு பரிசு பொருள் இந்த கீ செயின். உங்கள் நண்பரின் பெயரையோ அல்லது அவரின் செல்ல பெயரையோ அல்லது நீங்கள் ரகசியமாக காத்து வந்த, வேடிக்கையான சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஏதேனும் ஒரு பெயரையோ அச்சடித்து அவர்களுக்கு பரிசளிக்கலாம்.
கைவினை பொருட்கள்: உங்கள் கையால் செய்த கைவினை அலங்கார பொருட்கள் ஏதேனும் பரிசளிக்கலாம். உங்கள் நினைவாக, அது உங்கள் நண்பர் வீட்டை அலங்கரிக்கட்டும். நீங்கள் வரையக்கூடியவராக இருந்தால், உங்கள் ஓவியத்தை கூட பரிசளிக்கலாம். உங்கள் இருவரின் புகைப்படத்தை அழகான ஓவியமாக தீட்டி பரிசளிக்கலாம்.
card 3
உங்கள் நண்பருக்கு பிடித்த நிறத்தில் ஆடைகளை பரிசளியுங்கள்
கொலாஜ்: பல புகைப்படங்கள் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்ட பெரிய புகைப்படத்திற்கு பெயர் தான் collage. நீங்கள் குழுவாக மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை சேகரித்து, புகைப்பட கோர்வையாக பரிசளிக்கலாம். அல்லது புகைப்படங்களை ஒன்றிணைத்து ஒரு வீடியோவாக மாற்றி அவருக்கு அனுப்பலாம்.
டீ ஷர்ட்: வேடிக்கையான வாசகம் கொண்ட டீ ஷர்ட்கள் பல சந்தையில் கிடைக்கின்றது. நீங்கள் இருவரும் ஒரே வாசகம் கொண்ட டீ ஷர்ட் அணிந்து சென்றால், அது பலரையும் திரும்பி பார்க்க வைக்கும். அல்லது உங்கள் நண்பருக்கு பிடித்த நிறத்தில் ஒரு டீ ஷர்ட் பரிசளிக்கலாம். இக்காலத்தில் பெண்களும் டீ ஷர்ட் அணிவதால், அவர்களுக்கும் இதை பரிசளிக்கலாம்.
card 4
வாசனை திரவியம் முதல் அழகு சாதன பொருட்கள் வரை
அழகு சாதனங்கள்: ஆண்கள், பெண்கள் இரு பாலரும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள். உங்கள் நண்பருக்கு தேவைப்படும் அல்லது அவர் நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்த ஏதேனும் அழகு சாதன பொருளை அவருக்கு பரிசளிக்கலாம்.
டிஜிட்டல் பொருட்கள்: உங்கள் நண்பருக்கு பயன்படும் வகையில் ஏதேனும் மின்னணு சாதனத்தை பரிசளிக்கலாம். டிஜிட்டல் போட்டோ பிரேம் முதல் நியான் லைட் வரை பல வித்தியாசமான பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. தனிப்பயனாக்கப்பட்ட நியான் லைட் அவர்கள் படுக்கை அறையை அலங்கரிக்கலாம். டிஜிட்டல் போட்டோ பிரேம் அவர்கள் அலுவலக மேஜையை அலங்கரிக்கக்கூடும். அல்லது அவர்கள் பயன்படுத்தும் வகையில், ஹெட்செட், பவர் பேங்க் போன்ற பொருட்களை வாங்கி பரிசளிக்கலாம்.
card 5
புத்தகப்பிரியர்களுக்கு புத்தகம் பரிசு!
புத்தகங்கள்: உங்கள் நண்பர் ஒரு புத்தக பிரியராக இருந்தால், அவருக்கு பிடித்த எழுத்தாளரின் புத்தகங்களை வாங்கி தரலாம். அல்லது அவர் எழுதுவதற்கு அழகான நோட்புக் பரிசளிக்கலாம். உங்கள் நினைவாக அது அவருக்கு பயன்படும்
ஸ்பா கூப்பன்: தினசரி வேலை செய்து, களைத்து போன உங்கள் நண்பருக்கு ஏதேனும் பிரபல ஸ்பா கடையின் கூப்பனை பரிசளிக்கலாம். அவருக்கு தேவைப்படும் நேரத்தில் அங்கே சென்று மசாஜ் செய்துவர, அவர் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்.