
நட்பைப் புதுப்பிப்பதும் ஒரு சுகானுபவமே!
செய்தி முன்னோட்டம்
நம் வாழ்வின் முக்கியமாக பகுதிகளுள் ஒன்று நட்பு. பள்ளி செல்லும் பருவத்தில் தொடங்கும் நட்பும், நம்முடன் சேர்ந்து வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
பள்ளி, கல்லூரியில் நெருங்கிய நட்பாக இருக்கும் பலரையும், நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்போது பிரிய நேரிடும்.
அதில் சில நட்புகள் நம்முடன் தொடர்ந்து பயணித்தாலும், அனைவரையும் இணைந்து பயணிப்பது இயலாத காரியம். பள்ளி அல்லது கல்லூரி நண்பர்களைப் பிரியும்போது, கண்டிப்பாக ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்போம் என்னும் சபதத்தோடு தான் பிரிவோம்.
ஆனால், அந்த சபதத்தை காப்பாற்றுவது சற்று கடினம் தான்.
தொடர்ந்து சபதத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்றாலும், மீண்டும் நம் நண்பர்களைத் தொடர்பு கொள்வது அவ்வளவு கடினமான செயல் இல்லையே! உங்களுக்கு உதவ இதோ சில ஐடியாக்கள்!
card 2
சமூக வலைத்தளம்
பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த நண்பர்களை அவ்வப்போது மீண்டும் தொடர்பு கொள்வதில் தவறில்லை.
சமூக வலைத்தளங்கள் பெருகிக் கிடக்கும் இன்றைய தலைமுறையில், அவர்களை தொடர்பு கொள்வது மிக மிக எளிது.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் முதல் தற்போதைய புதிய அறிமுகம் த்ரெட்ஸ் வரை பல தளங்கள் உள்ளன.
உங்களின் நண்பரை அதில் தேடி பிடியுங்கள். முதலில் Follow Request தரலாம்.
அவர்கள் உங்களை Accept செய்தால், அடுத்த கட்டமாக அவர்களின் பதிவுகளுக்கு ஒரு லைக்-ஐ தட்டி விடுங்கள். அப்படியே ஒரு கமெண்ட், பின்னர் DM -இல் ஒரு ஹாய் மெசேஜ்!
நேர்மறையான பதில் ரிப்ளை வந்தால், அவ்வளவுதான்..உங்கள் பழைய நட்பு மீண்டும் துளிர்த்து விட்டது என அர்த்தம்!
card 3
மனதயக்கத்தை உடைக்க வேண்டும்
பால்ய பருவத்திலும் சரி, முதிர் பருவத்திலும் சரி, நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வருவது சகஜமே. ஆனால், அது உங்கள் அபூர்வமான நட்பை உடைக்கும் கருவியாக மாறிவிடக்கூடாது.
இந்த நண்பர்கள் தினத்தில், உங்கள் மனதில் இருக்கும் கசப்பான எண்ணங்களை தூர எரிந்து விட்டு, உங்கள் நண்பரை தேடி சென்று பேச முயற்சிக்கலாம்.
நண்பரிடம் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் தவறில்லை. ஏனென்றால் அவர் உங்கள் நண்பர்! கடைசி வரை உடன் நிற்க போகும் ஒரு உறவு. அந்த உறவை காக்க, உங்கள் ஈகோவை தூர போட்டு முதல் அடி எடுத்து வையுங்கள்.
நீங்கள் சந்தோஷமாக கழித்த நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே, இந்த நண்பர்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடலாம்.
card 4
நண்பர்கள் குழுவுடன் சந்திப்பு
தனியாக உங்கள் நண்பரை சந்திக்க சங்கோஜமாக இருக்கிறதா? எனினும் உங்கள் நட்பை புதுப்பிக்க வேண்டும் என்ற ஆவலும் உந்தி தள்ளுகிறதா?
உடனே உங்கள் நண்பர்கள் குழுவுடன் ஒரு கெட்-டுகெதர் பிளான் செய்யுங்கள்.
அனைவருக்கும் அழைப்பு விடுங்கள், குறிப்பாக உங்கள் பிரியமான நட்பிற்கும்.
பொது வெளியில் சந்தித்து பேசும்போது, நீங்கள் இருவரும் சகஜமாக பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
card 5
குறுஞ்செய்தி அனுப்பலாம்
உங்கள் நண்பரின் தொலைபேசி எண் இருந்தால், உடனே ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் தட்டி விடவும்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் எடுத்த புகைப்படம் ஏதேனும் இருந்தால் அதை பகிர்ந்து, உங்கள் நண்பரை இத்தருணத்தில் நினைப்பதை அவருக்கு குறிப்பாக உணர்த்தலாம்.
என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும், அந்த பழைய புகைப்படத்தை பார்த்ததும் உங்களுடன் பேச துவங்கி விடுவார்கள்.
முதலில் ஒருவரைப் பார்த்தவுடன் நாம் நட்பாகி விடுவதில்லை, பிறருடன் நாம் நண்பர்களாக புரிதலும், கால அவகாசமும் முக்கியம். நட்பை புதுப்பிப்பதற்கும் அது முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.