சோர்வடைந்த கண்களுக்கு, அழுத்தத்தை போக்க சில பயனுள்ள டிப்ஸ்
அதிகப்படியான கணினி உபயோகித்தலும், நாள் முழுவதும் தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவதாலும், பலருக்கும் கண் சோர்வடைந்து, குறைபாடுகள் ஏற்படுகின்றன. கண் அழுத்தம், நீர் வடிதல், அரிப்பு போன்றவையும் ஏற்படுவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதை தவிர்க்க, சில வழிமுறைகள்: அறையின் ஒளியை சரி செய்யவும்: உங்கள் அறையின் வெளிச்சம், அதிக பிரகாசமாகவோ, மங்கலாகவோ இருக்க கூடாது. அதிகப்படியான வெளிச்சம், கண்களுக்கு கூச்சத்தை உண்டாக்கும். மங்கலான வெளிச்சத்தினால், கண்களில் அழுத்தம் ஏற்படும். அடிக்கடி கண் சிமிட்டவும்: ஒரு நபர் டிஜிட்டல் சாதனங்களின் திரையை பார்க்கும் போது, வழக்கத்திற்கு மாறாக, மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கண் சிமிட்டுகிறார் என்று ஆராய்ச்சி கூறுகிறது. சரியான விகிதத்தில், கண் சிமிட்டாமல் இருப்பது, பார்வை இழப்பிற்கும் வழிவகுக்கும்.
20-20-20 ரூல்
கண்களுக்கு உடற்பயிற்சி: அதிக நேரம் கணினியின் திரையை காண்பதால், கண்கள் சோர்வடையும். அதற்கு, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், உங்கள் திரையில் இருந்து விலகி, குறைந்தது 20 வினாடிகளுக்கு, உங்களிடமிருந்து 20 அடி தொலைவில் உள்ள பொருட்களின் மீது கவனம் செலுத்துங்கள். இதன் பெயர் 20-20-20 ரூல். வறண்ட கண்களுக்கு, தற்போது செயற்கை கண்ணீர் விற்கப்படுகிறது. மருத்துவரின் பரிந்துரைப்பிற்கு ஏற்றவாறு, அனைத்து மருந்து கடைகளிலும் அது கிடைக்கிறது. இது கண்களை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. நீல ஒளிக்கான ஷீல்டு: உங்கள் போன்கள் மற்றும் மடிக்கணினிகளிலிருந்து வெளிவரும், நீல ஒளியை தடுக்கும் வண்ணம், ப்ரொடெக்ட்டிவ் ஷீல்டுகள் விற்கப்படுகின்றன. அதை உபயோகிக்கலாம்.