20 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை விற்கப்படும் செல்ல பிராணிகள்; விபரம் உள்ளே
பொதுவாக நாய்க்குட்டிகள், பூனை குட்டிகள் என சில ஆயிரம் ரூபாயில், மலிவாக தான் செல்ல பிராணிகள் வாங்குவது வழக்கம். ஆனால் 20 ஆயிரம் அமெரிக்கா டாலர் விலையிலும் செல்ல பிராணிகள் விற்கப்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? விவரம் உள்ளே: வெள்ளை சிங்கக் குட்டிகள்: மிகவும் அரிதான, வெள்ளை சிங்கக் குட்டிகள் உலகின் மிக விலையுயர்ந்த செல்லப்பிராணிகளில் ஒன்றாகும். இவற்றின் விலை $14,000க்கும் அதிகமாகும். பாலைவன பகுதிகளிலும், ஸாவன்னா காடுகளிலும் காணப்படும் இந்த அறியவகை சிங்கத்தின் பராமரிப்பு செலவும் அதிகம். சவன்னா பூனைகள்: சேர்வல் எனப்படும் காட்டு பூனைக்கும், வீட்டு பூனைக்கும் பிறந்த கலப்பினமாகும், இவ்வகை பூனைகள். காட்டு பூனையை போன்ற கழுத்தும், உடலெங்கும் புள்ளிகளும் நிறைந்திருக்கும். இந்த பூனைகளின் விலை $20,000க்கு மேல்.
10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு கிளி!
திபெத்திய மஸ்தீப்: இந்த மலை ஜாதி நாய், பெரிய உருவத்தை உடையது. நாய் வகைகளிலேயே அதிக விலையில் விற்கப்படும் நாயும் இதுவே. கிட்டத்தட்ட $1 மில்லியனுக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. மக்காவ்: வண்ணமயமான கிளி வகையை சேர்ந்த மக்காவ், பெரிய உருவம் கொண்டது. $10,000 க்கும் அதிகமாக விற்கப்படும் இவ்வகை கிளிகளின் பராமரிப்பு மிகவும் கடினமாகும். அதன் உருவத்திற்கு ஏற்றார் போல, பெரிய கூண்டு, ஊட்டசத்து மிக்க உணவு, மற்றும் அதன் நுண்ணறிவுக்கு தேவை படும் பயிற்சி என இதன் பராமரிப்பு செலவும் அதிகம். லோவ்சென்: லோச்சென் அல்லது லிட்டில் லயன் டாக், சிறிய நாய் இனமாகும். இதன் விலை சுமார் $8,000 ஆகும். இந்த நாய்கள், சிறிய சிங்கங்களை போன்ற தோற்றம் உடையது.