
செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம்
செய்தி முன்னோட்டம்
முகேஷ் அம்பானியின் இல்ல விழாவில், அவர்கள் வீட்டு செல்ல நாய்க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட வீடியோ ஒன்று, தற்போது வைரல் ஆகி வருகிறது.
முகேஷ் அம்பானியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும், நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.
மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான விழாவில், அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள், முக்கிய அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், இவர்களையும் தாண்டி அவ்விழாவில், அனைவரையும் கவர்ந்தது அவர்கள் வீட்டு செல்ல நாய் தான்.
சடங்குகள் முடிந்த பிறகு, மோதிரம் மாற்றும் விழா நடந்தது. அப்போது, அவர்கள் செல்ல நாய், மோதிரத்தை கொண்டு வந்து, மணமக்களிடம் கொடுத்தது.
அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
அம்பானி வீட்டு விசேஷம்
#WATCH | Engagement of Anant Ambani and Radhika Merchant held at Mukesh Ambani's Mumbai residence 'Antilla' yesterday pic.twitter.com/igSZQ9fOT5
— ANI (@ANI) January 20, 2023