இந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும், அதன் சொந்த தனித்துவமான பலகாரங்கள் உள்ளன. பாரம்பரியம் மிக்க அந்த பலகாரங்களில் பெரும்பாலானவை புவிசார் குறியீடு (GI) பெற்றுள்ளன. பயன்படுத்தப்படும் பொருட்கள், நுட்பங்கள், அவற்றின் தோற்றம் மற்றும் தனித்துவத்துவம் என தேர்வு செய்யப்படும் பொருட்களுக்கே புவிசார் குறியீடு தரப்படும். அப்படி புவிசார் குறியீடு பெற்ற சில இனிப்பு பலகாரங்கள் இதோ: கோவில்பட்டி கடலைமிட்டாய்: வெல்லம் மற்றும் வேர்க்கடலை சேர்த்து, மேலே தேங்காய் துருவல் போட்டு தயாரிக்கப்படும், கோவில்பட்டி கடலைமிட்டாய், அதன் மொறுமொறுப்பான தன்மைக்காகவும், சுவைக்காகவும், ஏப்ரல் 2021-இல் GI சான்று பெற்றது. நிலக்கடலை மற்றும் வெல்லத்துடன், தாமிரபரணி நீரை சேர்ப்பதன் மூலம், இந்த தனித்துவமான சுவை பெறுகிறது அந்த கடலை மிட்டாய்.
பால்கோவா முதல் தார்வாட் பேடா வரை
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா: பால்கோவா என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூர் தான் என கூறும் அளவிற்கு பெயர்பெற்ற இந்த இனிப்பு, அங்கு கிடைக்கும் பசும்பாலின் தரத்தினால் தான் புகழ்பெற்றுள்ளது. பால்கோவா தயாரிக்க, புளியமரத்தின் கட்டைகளை எரித்து, இன்றும் பாரம்பரிய முறைப்படி தான், தயாரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு கிடைத்தது. மிஹிதன: மேற்கு வங்காளத்தின் பர்த்வான் மாவட்டத்தில் செய்யப்படும் மிஹிதானா, பூந்தியை போலவே தோற்றமளிக்கும். 2017ஆம் ஆண்டில், இந்த இனிப்பு பலகாரம் GI குறியீடை பெற்றது. மிஹிதானா, காமினிபோக் அரிசி, குங்குமப்பூ மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தார்வாட் பேடா: கர்நாடகாவின் தார்வாட் நகரில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் இந்த இனிப்பு சர்க்கரை, எருமை பால் மற்றும் பசும்பால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.