
கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா?
செய்தி முன்னோட்டம்
கோடை விடுமுறையை கழிக்க பலரும் சுற்றுலா தலங்களை தேடி செல்கின்றனர்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் கூட்டம் அலைமோதுகிறது என்றும், விலைவாசி கூடியுள்ளது என்றும் செய்திகள் வெளிவந்த உள்ளது.
இந்நிலையில், தமிழக கடற்கரை மாவட்டங்களையும் தேடி கூட்டம் அலைமோதுகிறது. சென்ற வாரம், சென்னை மெரினா கடற்கரையில் கூட்டம் அலைகடலென திரண்டது.
சென்ற வாரம் மூன்று நாள் விடுமுறை என்பதால், பல ஊர்களில் இருந்தும் மக்கள் கூட்டம்கூட்டமாக வந்திருந்தனர். ஆனால், சென்னையில் மெரினா கடற்கரையை போலவே மேலும் சில அழகான கடற்கரைகள் உள்ளது. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
மெரினா பீச்: இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை இது. 12 கி.மீ. தூரம் நீளும் இந்த கடற்கரை, அதன் வெண்மணல் திட்டிற்கு பெயர்பெற்றது.
card 2
சூரிய உதயத்தையும், அஸ்தமனதையும் அழகாக்கும் கடற்கரைகள்
கோவளம் பீச்: சென்னையில், நீள்கொடி அங்கீகாரம் பெற்ற ஒரே கடற்கரை இது. நீலக்கொடி அங்கீகாரம் என்பது நீண்ட வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்த கடற்கரைகளுக்கு வழங்கப்படும். சென்னையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கடற்கரை.
காசிமேடு கடற்கரை: மீனவ குடும்பங்கள் அதிகம் வாழும் கடற்கரை. மீன்பிடி தொழிலுக்கும், ஹார்பருக்கும் பெயர்பெற்றது இந்த அதிகம் பிரபலமாகாத கடற்கரை, வடசென்னையில் அமைந்துள்ளது.
மகாபலிபுரம் பீச்: சென்னையிலிருந்து 58 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த சுற்றுலா தளம். பல்லவ கால சிற்பங்களுடன் கூடிய அழகான கடற்கரை, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்குள்ள பாறை சிற்பங்கள் அனைத்தும் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை.