
சருமத்தில் தழும்புகளாக இருக்கிறதா? இதோ எளிதில் போக்கலாம்
செய்தி முன்னோட்டம்
பனி காலத்தில் சருமம் வறண்டு இருக்கும்.
அதோடு அவ்வப்போது ஏற்படும் சிறு காயங்கள் கூட ஆறாத வடுவாகவும், தழும்பாகவும் மாறிவிடும்.
சில தழும்புகள் தானாக குணமாகும் தன்மை கொண்டது.
சில தழும்புகளுக்கு முறைப்படி கவனிப்பு அவசியமாகிறது.
இந்த கட்டுரையில் நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில வீட்டு வைத்திய முறைகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
இதன்மூலம் முக்கியமான வழிகளை பயன்படுத்தி அவற்றை வீடுகளிலேயே குணப்படுத்த முடியும்.
ஈரப்பதம்
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது
ருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது, தழும்புகளை விரைவில் மறைக்க உதவும்.
இளம் வெயிலில் சிறிது நேரம் உட்கார்ந்து, சருமத்திற்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க உதவும், இது சரும அலர்ஜி மற்றும் தழும்புகளை போக்கும்.
அதோடு, வைட்டமின் ஈ அடங்கிய கிரீம் அல்லது எண்ணெயை சருமத்தில் தினசரி மசாஜ் செய்து தடவுவதன் மூலம் தழும்புகள் மறையும்.
தினமும் குளித்த பிறகு, வைட்டமின் E மற்றும் ரெட்டினால் அடங்கிய பாடி லோஷனை தழும்புகள் மற்றும் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, தழும்புகள் மறையும்.
இயற்கை
இயற்கை மருத்துவ முறையில் தழும்புகளை நீக்க
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து தழும்புகள் மேல் பூசுவதன் மூலம் பருக்கள் மற்றும் தழும்புகளை போக்க முடியும்.
அதோடு, தினசரி குளிப்பதற்கு தேங்காய் எண்ணெயை தேய்த்து, சிறிது நேரம் வைத்திருந்து பின் குளித்து வர, சருமத்தில் ஏற்பட்ட தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கும். இது சரும நிறத்தை மாற்றி, பொலிவையும் தரும்.
சந்தனம் மற்றும் மஞ்சளின் கலவையை தழும்புகளின் மீது பூசுவதன் மூலம், தழும்புகள் மற்றும் வடுக்கள் குறையும்.