NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா?
    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா?

    தீபாவளி கொண்டாட்டங்கள் எதற்காக எண்ணெய் குளியலுடன் தொடங்குகிறது எனத்தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 06, 2023
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி வரவிருக்கிறது. பல வீடுகளில் இதற்கான கொண்டாட்டங்கள் இப்போதே துவங்கி இருக்கும்.

    புத்தாடைகளை வாங்குவது, பட்டாசுகளை வெடிப்பது, பலகாரங்கள் செய்ய தொடங்குவது என பலரும் தங்கள் தீபாவளியை இந்த வார இறுதியிலிருந்து கொண்டாட துவங்கி விட்டார்கள்.

    சரி, இந்த தீபாவளி பண்டிகை என்றால், புத்தாடைகளும், பட்டாசுகளும் தானா? எண்ணெய் குளியலுடன் தொடங்கும் தீபாவளி கொண்டாட்டங்களில் வேறு என்னவெல்லாம் உள்ளது என தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

    card 2

    ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடப்படும் தீபாவளி 

    தீபாவளி நாளில், மக்கள் அதிகாலையில் எழுந்து, சூரிய உதயத்திற்கு முன், சூடான எண்ணெய் குளியல் மூலம் தங்கள் நாளைத் தொடங்க வேண்டும்.

    பின்னர் இறைவனை வணங்கி, விளக்கேற்றி, புதிய ஆடைகளையும், பலகாரங்களையும் சாமிக்கு படைத்து வணங்கி, பட்டாசு வெடித்து, தங்கள் அன்புக்குரியவர்களுடன் இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடுவது தீபாவளி.

    பொதுவாக, ஐப்பசி மாதம் வரும் அமாவாசையை தீபவாளியாக கொண்டாடுவார்கள்.

    வடஇந்தியாவை விட தென்னிந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    அந்தநாளில் அதிகாலை குளியல் என்பது கங்கைநீரில் குளிப்பது போன்று புனிதமாக கருதப்படுவதாலேயே, எண்ணெய் குளியலை 'கங்கா ஸ்னானம்' என்று அழைக்கிறார்கள்.

    card 3

    எதற்காக எண்ணெய் குளியல்?

    இந்து புராணங்களின்படி, மகாலக்ஷ்மி தேவி எள் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது, அதனால்தான் எண்ணெய் குளியல் செய்ய எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) பயன்படுத்தப்படுகிறது. லட்சுமி தேவியை வணங்கி இந்த எண்ணெய் தேய்ப்பதால், அவளின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    எண்ணெய் குளியல் என்பது ஈகோக்கள், சண்டைகள், சுயமரியாதை மற்றும் பொறாமை போன்ற கெட்ட எண்ணங்கள் நீங்கி, புதிய உத்வேகத்துடனும், நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வோம் என்பதை குறிக்கவே இந்த எண்ணெய் குளியல்.

    கூடுதலாக, அறிவியல் பூர்வமாக, ​​உடலில் இருந்து வெப்பத்தை குறைக்க, எள் எண்ணெய் சரியானதொரு நிவாரணி என நிபுணர்கள் கூறுகின்றனர். சருமத்தில், எண்ணெய் தடவுவது, இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவுவது மட்டுமின்றி, சருமத்தை சுத்தப்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.

    card 4 

    எண்ணெய் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் 

    கூடுதலாக, எண்ணெயைத் தடவுவது, உடலை ஈரப்பதமாக்குவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாடுகள் மற்றும் நச்சுகளிலிருந்து சருமத்தை சுத்தப்படுத்துகிறது.

    இறந்த செல்களையும் நீக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இது சருமத்தின் தன்மை மற்றும் நிறத்தை அதிகரிக்கிறது.

    வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு தலையை மசாஜ் செய்வது மன அழுத்தத்தை நீக்குகிறது மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது.

    இது நரம்புகளைத் தூண்டுகிறது மற்றும் உணர்ச்சி மோட்டார் ஒருங்கிணைப்புக்கு உதவுகிறது.

    எண்ணெய் குளியல், ஆழ்ந்த உறக்கத்தைப் பெறவும், நமது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

    card 5

    எண்ணெய் மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் 

    எண்ணெய் மசாஜ், மனச்சோர்வு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுக் கோளாறு, நீரிழிவு, மஞ்சள் காமாலை, புற்றுநோய் மற்றும் பிற வைரஸ் நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது.

    நல்லெண்ணெய் தேய்ப்பதால், கண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் கண்களில் உள்ள சோர்வினை நீக்கி, பார்வையை அதிகரிக்கிறது.

    மன மற்றும் உடல் அழுத்தத்தை குறைக்கிறது.

    முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் பாதங்களில் வறண்ட சருமம் உருவாவதைத் தடுக்கிறது.

    இது உடலின் உள்ளே இருந்து, வெப்பத்தை வெளியேற்றுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    தீபாவளி 2023
    பண்டிகை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    தீபாவளி 2023

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள் இந்தியா
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025