NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சிட்ரஸ் பழங்களின் தோல்களை இப்படியும் பயன்படுத்தலாம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிட்ரஸ் பழங்களின் தோல்களை இப்படியும் பயன்படுத்தலாம்
    சிட்ரஸ் பழங்களின் தோல்களை இப்படியும் பயன்படுத்தலாம்

    சிட்ரஸ் பழங்களின் தோல்களை இப்படியும் பயன்படுத்தலாம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 28, 2023
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழங்கள் போன்றவை மிகவும் விரும்பப்படும் பருவகால பழங்களாகும்.

    அவை, அவற்றின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக சிறந்த தேர்வுகளாக பார்க்கப்படுகின்றன.

    இருப்பினும், உண்ண முடியாதவை என்று நீங்கள் நினைத்துக் குப்பையில் போடக்கூடிய அவற்றின் தோல்கள், பல்வேறு ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

    card 2

    உங்கள் வீட்டை சுத்தம் செய்ய

    சிட்ரஸ் பழங்களின் தோல்கள் உங்கள் வீட்டை சுத்தம் செய்யவும், சாதாரண சோப்புகளினால் செல்ல மறுக்கும் கடினமான கறைகளை அகற்றவும் பயன்படுத்தப்படலாம்.

    சில ஆரஞ்சுத் தோல்களை, வெள்ளை வினிகரில் இரண்டு வாரங்கள் ஊறவைத்து, கரைசலை வடிகட்டி, சிறிது தண்ணீர் கொண்டு நீர்த்து, மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ் கதவுகள் மற்றும் அடுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தவும்.

    card 3

    தாவர பூச்சிகளை விரட்ட

    இந்த பழங்களில் உள்ள வலுவான வாசனை, உங்கள் செடிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தாவர பூச்சிகளை விரட்ட எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களைப் பயன்படுத்தலாம்.

    குறிப்பாக எறும்புகள் மற்றும் அஃபிட்ஸ் விஷயத்தில், அவை சிறப்பாக செயல்படுகின்றன.

    நீங்கள் செய்ய வேண்டியது, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்களை பாதிக்கப்பட்ட செடிகளைச் சுற்றி வைக்கவும் அல்லது பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கும் தண்டுகளில் தொங்கவிடவும்.

    card 4

    அத்தியாவசிய எண்ணெய்களை தயாரிக்க

    உங்களுக்கு பிடித்த சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு, அவற்றின் தோலை தூக்கி எறிய வேண்டாம்.

    அதற்கு பதிலாக, உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய எண்ணெய்களை தயாரிக்க அவற்றைப் பயன்படுத்தவும் .

    தோலில் இருந்து முடிந்தவரை சதை பகுதியை நீக்கவும். பின்னர், அவற்றை உலர வைக்கவும்.

    பின்னர் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

    இந்த கலவையை, ஒரு பகுதி ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் இரண்டு பங்கு தண்ணீரிலும் சேர்த்து கலந்து தடவவும்.

    card 5

    உங்கள் தேநீரில் கலந்து குடிக்க

    அதிக சுவை மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக உங்கள் வழக்கமான தேநீருடன் கலக்க, ஆரஞ்சு தோல்களை பயன்படுத்தப்படலாம்.

    வெறுமனே, ஆரஞ்சு தோலை சிறிய துண்டுகளாக நறுக்கி, இரண்டு நாட்களுக்கு உலர வைக்கவும். காய்ந்ததும், அவற்றை பிளாக் டீயுடன் கலக்கவும்.

    நீங்கள் விரும்பினால், அதில் பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இஞ்சி, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்க்கவும்.

    இந்தக் கலவையைப் பயன்படுத்தி தேநீர் தயாரிக்கவும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கிய குறிப்புகள்
    வீட்டு அலங்காரம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆரோக்கிய குறிப்புகள்

    வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம் உணவு குறிப்புகள்
    உங்கள் நகங்களின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறியலாம் ஆரோக்கியம்
    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை ஆரோக்கியமான உணவு

    வீட்டு அலங்காரம்

    நீங்கள் வீட்டில் வைக்கக்கூடாத தாவர வகைகள் வாஸ்து
    பயன்படுத்திய தேயிலை இலைகளை தூக்கி எறிய வேண்டாம். இப்படியும் மறுசுழற்சி செய்யலாம் வீட்டு வைத்தியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025