
புரட்டாசி ஸ்பெஷல்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய, இதோ ரெசிபி
செய்தி முன்னோட்டம்
அசைவ பிரியர்களுக்கு சிறந்த மாற்றான ஒரு உணவு பன்னீர். சுவை மட்டுமின்றி, அசைவ உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளும் நிரம்பிய உணவு பொருளாகும்.
இதில் கால்சியம், புரதம், பாஸ்பரஸ், ஃபோலிட் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பன்னீரை பலவிதமாக, பல வகையாக சமைக்கலாம். பன்னீர் பரோட்டாவில் தொடங்கி பன்னீர் பாப்கார்ன் வரை பன்னீரை வைத்து செய்யும் எல்லா ரெசிபிக்களும் பலருக்கும் பிடிக்கும்.
குறிப்பாக ஸ்டார்ட்டர்களாக செய்யப்படும் பன்னீர் டிஷ்களுக்கு எப்போதுமே ரசிகர் கூட்டம் உண்டு.
அந்த வகையில், இன்று பன்னீர் டிக்கா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
card 2
தேவையான பொருட்கள்
பன்னீர் - 250
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு பொடி - ½ டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - ¼ டீஸ்பூன்
சீரக பொடி - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி - ½ டீஸ்பூன்
கெட்டியான தயிர்- 2-3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1/2
சாட் மசாலா - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
card 3
செய்முறை
டிக்கா செய்வதற்கு ஏற்ற மீடியம் சைஸ் துண்டுகளாக பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் முற்றிலும் நீக்கப்பட்ட கெட்டி தயிர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
இதனுடன் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, சீரகப்பொடி, கசூரி மேத்தி, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனுடன் சதுரங்களாக நறுக்கி வைக்கப்பட்ட பன்னீர், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஊற வைக்கவும்.
குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
card 4
செய்முறை
ஓவன் அல்லது தோசை கல்லில் இந்த பன்னீர் டிக்காவை செய்யலாம்.
டிக்கா செய்வதற்கு குச்சிகள் (Skewers) இல்லை என்றால் நேரடியாக தோசை கல்லில் அடுக்கி வைத்தும் இதை செய்ய முடியும்.
குச்சிகள் இருந்தால், பன்னீர், வெங்காயம், குடைமிளகாய் என வரிசையாக சொருகி கொள்ளவும்.
பன்னீர் மற்றும் காய்கறிகள் சமமாக வேகும்படி திருப்பி போட்டு, வேகவைத்து கொள்ளவும்.
பன்னீர் துண்டுகளின் நான்கு புறமும் நன்றாக வெந்திருப்பதை உறுதி செய்யவும்.
கடைசியாக சாட் மசாலா தூவி, கொத்தமல்லி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.