NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?
    இது ஆரோக்கிய உணர்வுள்ளவர்களுக்கும், சைவ பிரியர்களுக்கும் ஏற்ற உணவாகும்

    ஆரோக்கியம் நிறைந்த சுவையான கொண்டைக்கடலை கீரை கறி செய்வது எப்படி?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2024
    01:19 pm

    செய்தி முன்னோட்டம்

    சமையல் குறிப்பு: கொண்டைக்கடலை கீரை கறி அல்லது சன்னா பாலக் மசாலா, ஒரு சத்தான உணவாகும்.

    இது கொண்டைக்கடலை மற்றும் கீரையின் வளமான நற்பண்புகளையும், சுவையையும், நறுமணமிக்க மசாலா கலவையுடன் ஒருங்கிணைத்து தயார் செய்யப்படுகிறது.

    இது ஆரோக்கிய உணர்வுள்ளவர்களுக்கும், சைவ பிரியர்களுக்கும் ஏற்ற உணவாகும்.

    இந்த கொண்டக்கடலை கீரை கறி, சுவை அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் செயல்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    கொண்டைக்கடலை கீரை கறிக்கு தேவையான பொருட்கள்

    தேவையான பொருட்கள்

    இந்த கறிக்கு, உங்களுக்கு தேவைப்படும் பொருட்கள்:

    ஒரு கப் ஊறவைத்த கொண்டைக்கடலை

    இரண்டு கப் சுத்தம் செய்து, நன்றாக கழுவி நறுக்கிய கீரை (முளை கீரை அல்லது பசலை கீரை)

    ஒரு பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)

    இரண்டு தக்காளியின் விழுது

    இரண்டு பூண்டு(பொடியாக நறுக்கியது)

    ஒரு அங்குலம் இஞ்சி (பொடியாக நறுக்கியது)

    ஒரு தேக்கரண்டி சீரகம்

    ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள்

    ஒரு தேக்கரண்டி மல்லி தூள்

    ஒன்றரை தேக்கரண்டி கரம் மசாலா

    சுவைக்கு உப்பு

    இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர்.

    செய்முறை

    சுவையான கொண்டக்கடலை கீரை கறி செய்முறை

    ஊறவைத்த கொண்டைக்கடலையை, உப்பு சேர்த்து மென்மையாகும் வரை அல்லது பிரஷர் குக்கரில் 4 விசில் வைத்து சமைக்கவும்.

    மறுபுறம், ஒரு பெரிய கடாயில், மிதமான தீயில் எண்ணெயை சூடாக்கி, சீரகம், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பின்னர் அதனுடன், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.

    பின்னர் தக்காளி விழுது, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியத்தொடங்கும் வரை வதக்கவும்.

    நறுக்கிய கீரையை சேர்த்து, மெல்லிய தணலில், சுமார் ஐந்து நிமிடங்கள், கீரை வேகும் வரை தொடர்ந்து கிளறவும்.

    இறுதி ஸ்டெப்

    சப்பாத்தி, நாண், சாதத்துடன் சாப்பிடலாம்!

    கீரை கலவையில் இப்போது வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கறி ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவும். பின்னர் 10 நிமிடங்கள் குறைவான தணலில் மூடி வைத்து, சமைக்கவும்.

    இறுதியாக கரம் மசாலாவை தூவி, அடுப்பிலிருந்து இறக்குமுன்னர், நன்கு கிளறவும்.

    சுவையான கொண்டக்கடலை கீரை கறி தயார்!

    இதனை சூடான மதிய உணவிற்கு சாதத்திற்கு காயாகவும் அல்லது நாண், ரொட்டி போன்ற நார்த்-இந்தியன் உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாகவும் பரிமாறவும் .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமையல் குறிப்பு
    ஆரோக்கியம்
    உணவு குறிப்புகள்
    ஆரோக்கியமான உணவு

    சமீபத்திய

    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி

    சமையல் குறிப்பு

    மண்பாண்ட சமையலின் நன்மைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு ஆரோக்கியம்
    வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்? தமிழ்நாடு
    மைக்ரோவெவ் ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை எனத்தெரியுமா? வாழ்க்கை
    புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும் புரட்டாசி

    ஆரோக்கியம்

    இங்கிலாந்தில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள் தூக்கம்
    அமெரிக்காவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்  அமெரிக்கா
    கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அதன் அறிகுறிகள் என்ன? உடல் ஆரோக்கியம்
    இந்தியா மற்றும் கனடாவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள் தூக்கம்

    உணவு குறிப்புகள்

    இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி சமையல் குறிப்பு
    சமையல் குறிப்பு: வீகன் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி? சமையல் குறிப்பு
    புரட்டாசி ஸ்பெஷல்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய, இதோ ரெசிபி புரட்டாசி
    புரட்டாசி ஸ்பெஷல்: இந்த வாரம் வெஜிடேரியன் ஷீக் கெபாப் செய்து பாருங்கள்  புரட்டாசி

    ஆரோக்கியமான உணவு

    மேக்டொனல்ட்ஸ் ஸ்டைல் பிரட் பீட்சா பாக்கெட் செய்வது எப்படி? குழந்தைகள் உணவு
    ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி ஆரோக்கியம்
    உங்கள் நுரையீரலை பாதுகாக்கும் சில காய்கறிகளும், பழங்களும்  ஆரோக்கியம்
    என்றென்றும் இளமையாக இருக்க, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆயுர்வேத பொருட்கள் ஆயுர்வேதம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025