ஏன் வீட்டில் சமைத்த உணவுகளில் ஆரோக்கியம் அதிகமாக இருக்கிறது?
மாறிவரும் வாழ்க்கை சூழல்களால் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கமாகி கொண்டிருக்கிறது. கடைகளில் வாங்கும் உணவுகள் ஆரோக்கியமற்றது என்றும், வீட்டில் செய்து சாப்பிடுவது தான் நல்லது என்றும் பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அப்படி வீட்டில் செய்யும் உணவுகள் ஏன் ஆரோக்கியமானது என்பதை இப்போது பார்க்கலாம். உணவு மூலம் பரவும் பல நோய்களைத் தவிர்க்கலாம் குறிப்பிட்ட உணவை வெளியே உண்பதால் வயிற்று கோளாறு ஏற்படுவதை நம்மில் பலர் ஏற்கனவே உணர்ந்திருப்போம். உலகில் 250க்கும் மேற்பட்ட மோசமான உணவுகளால் ஏற்படும் நோய்கள் உள்ளன. எல்லா உணவகங்களிலும் சுத்தம் மற்றும் சுகாதாரத்தோடு உணவு தயாரிக்கப்படுவதில்லை. ஆனால், நமக்கு நாமே உணவு தயாரிக்கும்போது, கைகள் மற்றும் பாத்திரங்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதை நாமே சரிபார்த்துகொள்ள முடியும்.
நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவை எடுத்து கொள்ளலாம்
வெளியே வாங்கும் வாங்கும் உணவுகளில் அதிகப்படியான சர்க்கரை, செயற்கையான வண்ணபூச்சு, சுவையூட்டும் பொருட்கள் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், வீட்டில் செய்யும் போது அலங்காரத்திற்காக இல்லாமல், ஆரோக்கியத்திற்காக நம்மால் உணவை தயாரிக்க முடியும். அளவோடு, ருசித்து சாப்பிடலாம் உணவகங்களில் செய்யப்படும் உணவுகள் விற்பதற்காக செய்யப்படுவதால், அதிக மக்களை வாங்க வைக்க வேண்டும் என்பதற்காக உணவுகளில் ருசியூட்டும் பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், வீட்டில் உணவு தயாரித்தால், அதை ருசியோடும் அளவோடும் சாப்பிட முடியும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் அதிக வேலையில் சிக்கிக்கொண்டு மன நிம்மதி தேடுபவர்கள் அன்றாட வாழ்க்கையில் மன நிம்மதி தரும் ஒரு கலையாக சமயலை பார்க்கலாம். அப்படி செய்தால், உடல் ஆரோக்கியதோடு மன ஆரோக்கியமும் மேம்படும்.