
இந்தியாவில் பருவமழையின் போது பார்க்க வேண்டிய இடங்கள்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பருவமழை காலங்களின் போது மலைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகள் அழகாக காட்சியளிக்கும். இதனை அனுபவிப்பதற்கான சிறந்த இடங்களை பார்க்கலாம்.
கூர்க்: கர்நாடகா, இந்தியாவின் அதிக மழை பெய்யும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. பசுமையான இடங்களும், நிரம்பி வழியும் ஆறுகளும், கொட்டும் அருவிகளும் தேனிலவுக்கான சிறந்த இடமாக கருதப்படுகிறது. எனவே திருமணமான தம்பதிகள் செல்ல கூர்க் பிரபலமான இடமாகும்.
லோனாவாலா: மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் இந்த இடம் அதன் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை மற்றும் பிரமிக்க வைக்கும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் போனவை. இந்த அழகிய இடம் நிச்சயமாக உங்களுக்கு சிறந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் அளிக்கும்.
Monsoon Plans
பருவமழையில் போது சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்
டார்ஜிலிங்: மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள டார்ஜிலிங்கிற்கு அறிமுகம் தேவையில்லை. தேயிலைத் தோட்டங்களுக்குப் புகழ் பெற்ற இந்த இடத்தில் மழை மற்றும் மூடுபனியின் காட்சிகளை நீங்கள் அனுபவிக்கலாம். இங்கே புகழ்பெற்ற டார்ஜிலிங் தேநீரை பருக்காமல் உங்கள் பயணம் நிறைவடையாது.
கோவா: கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற கோவா, பருவமழையின் போது தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. கடற்கரையில் பெய்யும் மழையின் அழகிய காட்சியை ரசித்துக் கொண்டே ருசியான கோவா உணவுகளை சுவைக்கலாம். இங்கு மலையேற்றம், மீன்பிடித்தல் மற்றும் பறவைகளைப் பார்ப்பது போன்ற விஷயங்களையும் செய்ய ஏற்ற இடம்.
ஆலப்பி: கேரளாவின் ஆலப்புழா என்றும் அழைக்கப்படும் ஆலப்பி ஆயுர்வேத ஓய்வு விடுதிகளுக்கு பிரபலமான இடமாகும். இங்கு படகு சவாரி செய்து கொண்டே மழையை அனுபவிக்கலாம்.