LOADING...
பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு - ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
நன்மைகளை பொறுத்து, உங்களின் விருப்ப உப்பை தேர்வு செய்யவே இந்த பதிவு

பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு - ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 14, 2025
12:02 pm

செய்தி முன்னோட்டம்

உணவின் சுவையையும், உடலின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கியக் கூறு உப்பு. சமீப காலமாக, பிங்க் இமயமலை உப்பும் (Pink Himalayan Salt) வழக்கமான வெள்ளை உப்பும் (White Salt) நம்மிடையே பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் ஒரே நோக்கத்திற்காக - உணவிற்கு சுவை சேர்க்க - பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் கலவை, தயாரிக்கும் முறை, ஊட்டச்சத்து, மற்றும் ஆரோக்கிய தாக்கங்களில் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் மூலம் எது மற்றும் நமது உடலுக்கு அவை தரும் நன்மைகளை பொறுத்து, உங்களின் விருப்ப உப்பை தேர்வு செய்யவே இந்த பதிவு.

மூலம்

இரண்டு உப்புகளும் எங்கு இருந்து எடுக்கப்படுகின்றன?

பிங்க் உப்பு: பாகிஸ்தானில் உள்ள கேவ்ரா சுரங்கத்திலிருந்து இயற்கையாக எடுக்கப்படுகிறது. இதில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற 80+ நுண்ணிய கனிமங்கள் உள்ளதால் இது பிங்க் நிறத்தில் காட்சி தருகிறது. அதிகப்படியான பதப்படுத்தல் செய்யப்படுவதில்லை. வெள்ளை உப்பு: கடல் நீர் ஆவியாக்கம் அல்லது நிலத்தடி உப்புப் படிவங்களிலிருந்து பெறப்படுகிறது. இது அதிகமான சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே பெரும்பாலான இயற்கை கனிமங்கள் நீக்கப்படுகின்றன. ஆனால் இதில் அயோடின் சேர்க்கப்படுகிறது. இது தைராய்டு ஆரோக்கியத்திற்கு அவசியம்.

நன்மைகள்

இரு உப்புகளில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பிங்க் உப்பின் நன்மைகள்: இயற்கையான வடிவம் நுண்ணிய கனிமங்கள் கொண்டது எலும்பு, தசை ஆரோக்கியத்திற்கு சிறு பங்களிப்பு அதிகப்படியான வேதிப்பொருட்கள் சேர்க்கப்படவில்லை விலை அதிகம் வெள்ளை உப்பின் நன்மைகள்: சீரான சுவை, சமையலுக்கு ஏற்றது அயோடின் இருப்பு - தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியம் எளிதாகக் கிடைக்கும், விலை குறைவு எனினும், இரண்டு உப்புகளும் சோடியம் அதிகம் கொண்டவை. அதனால் அவற்றை அதிகம் உட்கொள்வதால், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். WHO பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு 2,300 mg க்கும் குறைவாக சோடியம் (சுமார் 1 தேக்கரண்டி உப்பு) அளவே போதுமானது.