
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள் எவை தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
இக்காலத்தில் குழந்தை வளர்ப்பதில், பெற்றோர்கள் தனியாக ஸ்பெஷல் கிளாஸ் செல்ல வேண்டும் போல. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும், கேட்ஜெட்டுகளுக்கும் நன்றி..!
சிறு வயதிலேயே, பிள்ளைகளுக்கு மனஅழுத்தம், நரம்பியல் கோளாறு என ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி இக்கால குழந்தைகளும் மிகவும் ஸ்மார்ட். 10 வருடங்களுக்கு முன்னர் வரையில், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தந்த காலம் போய், இப்போது பிள்ளைகள் பெற்றோர்களை வழிநடத்துகின்றனர்.
அவர்களின் வாழ்க்கையின் நோக்கமே, பிள்ளைகளுக்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்கின்றனர்.
அதே நேரத்தில், சமூகத்தில் துடிப்பான நல்ல இளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பும் பெற்றோருக்கு உண்டு.
அதற்கேற்றாற்போல, பிள்ளைகள் முன்னிலையிலும், பிள்ளைகளிடத்தும் பேசகூடாத சில வார்த்தைகள் உண்டு.
card 2
குழந்தைகளிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத வார்த்தைகள்
எதிர்மறை வார்த்தைகள்:பெற்றோர்கள் பயன்படுத்தும் சில எதிர்மறை வார்த்தைகள், குழந்தைகளுக்கு எதிர்மறையான சிந்தனைகள் உருவாவதற்கு தொடக்க புள்ளியாக அமையும். சாபம் அல்லது ஆபாச சொற்களை தவிர்த்தல்: குழந்தைகளின் நம்பிக்கையை பாதிக்கக்கூடிய சொற்களை ஒருபோதும் பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் கோபத்தோடு பயன்படுத்தும் வார்த்தைகள் அவர்கள் மனதில் ஆழமாக பதியக்கூடும். அது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலைக் கொடுக்கும். தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
மற்றவர்களுடன் ஒப்பிடுதல்: குழந்தைகளானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி, மற்றவர்களுடன் ஒப்பிடுவது யாருக்குமே பிடிக்காது. அதனால், எக்காலத்திலும், பிள்ளைகளை மற்றவர்களுடன் எதிர்மறையாக ஒப்பிடாதீர்கள். அது அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை உடைப்பது போன்றதாகும். பிள்ளைகளும் அதனால் தன்னம்பிக்கையை இழக்கக்கூடும்.