புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'பனீர் 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: புரட்டாசி மாதத்தில் நம்மில் பெரும்பாலானோர் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை. அதனால்தான், அசைவ உணவுகளின் சுவையையே தோற்கடித்துவிடும் சைவ உணவுகளின் ரெசிபிக்களை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், 'பனீர் 65' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பனீர்-200 கிராம் எண்ணெய் மாவு கலவைக்கு தேவையான பொருட்கள்: மைதா- 1.5 மேசைக்கரண்டி சோள மாவு-3 தேக்கரண்டி அரிசி மாவு- 3 தேக்கரண்டி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்- 2 தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி சோயா சாஸ்- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு அல்லது வினிகர்- 1 தேக்கரண்டி
'பனீர் 65' செய்முறை:
பனீரை கைகளில் பிடிப்பதற்கு ஏற்ற சிறிய க்யூப்களாக நறுக்கவும். 'மாவு கலவைக்கு தேவையான பொருட்கள்' என்பதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து, தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக பிசையவும். அதன் பிறகு, நறுக்கிய பனீர் துண்டுகளை மாவோடு சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாக எண்ணெயை சூடாக்கி, பனீர் துண்டுகளை அதில் போட்டு, அதன் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பனீர் துண்டுகள் பொன்னிறமானதும் அதை எடுத்து, ஒரு பேப்பர் டவலில் போட்டு வைக்கவும். இந்த பனீர் 65ஐ கெட்ச்அப் உடன் சேர்த்து மாலை வேளையில் தேநீருடன் சூடாக பரிமாறவும்.