
பிரபலங்கள் மீது அளவுகடந்த மோகம் உள்ளதா? இது நோயின் அறிகுறியாகஇருக்கலாம்
செய்தி முன்னோட்டம்
யாராவது பிரபலம் என்ற அந்தஸ்தை அடைந்தால், மக்கள் அவர்களை கொண்டாடுவதும், அவர்கள் மீது மோகம் கொள்வதும் இயல்பு. அவர்கள் செய்யும் பரிந்துரைகள், வாழ்க்கை மாற்றங்கள், என அவர்கள் செய்வதை அப்படியே பின்பற்றுவது, கொஞ்சம் கவலை அளிக்க கூடிய விஷயமாக மருத்துவத்துறையினாரால் பார்க்கப்படுகிறது.
இந்த வெறித்தனமான ரசிகர் குணத்தை, செலிபிரிட்டி வழிபாட்டு நோய்க்குறி (Celebrity worship Sydrome), எனக்குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற கோளாறுகளைப் பற்றி பேசக்கூடிய படங்கள், பாலிவுட்டில் ஒன்றிரண்டு வந்துள்ளது. ஷாருக்கான் நடித்த பேன் படம் இதை பற்றி தான் பேசுகிறது.
ஆனால், தமிழ் சினிமாவில், இது பற்றி முற்றிலுமாக பேசக்கூடிய வகையில் எந்த படமும் வரவில்லை
இந்த CWS-ஆல் பாதிக்கப்பட்ட நபர், தான் ரசிக்கும் பிரபலத்தை பற்றிய வெறித்தனமான எண்ணங்களை வெளிப்படுத்துவார்.
சினிமா ரசிகன்
பிரபல வழிபாட்டு நோய்க்குறியின் அறிகுறிகள்
அவர்களின் வாழ்க்கை, உறவுகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி தொடர்ந்து சிந்திப்பது, அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை தேடிச்சென்று வாங்குவது, அவர்களின் வெற்றி தோல்விகளுக்கு தீவிர உணர்ச்சிவசப்படுவது போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
இவர்கள், தாங்கள் ரசிக்கும் பிரபலங்களை பின்தொடர்தல் அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பது அல்லது நெருங்கி பழகுவது போன்ற நடத்தைகளிலும் ஈடுபடலாம்.
இந்த அறிகுறிகள் அதிகமாகும் பட்சத்தில், சொந்த வாழ்க்கையை அவர்கள் இழக்க நேரலாம். லட்சியமற்ற போக்கு உருவாகலாம்.
உங்கள் காதல் வாழ்க்கையையும், உங்கள் துணையையும், பிரபலங்களுடன் ஒப்பிட்டு, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
சுயமாக சிந்தித்து, இந்த போக்கை கட்டுப்படுத்துவது, அவரவர் எண்ணத்தில் தான் உள்ளது.