தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள்
சென்ற மாதம், பொங்கலுக்கு வெளியான இரு பெரும் படங்கள் அஜித்தின் 'துணிவு', மற்றும் விஜய்யின் 'வாரிசு'. படம் வெளியான அன்று, ரோஹிணி திரையரங்கின் அருகே, மெதுவாக சென்று கொண்டு இருந்த ஒரு லாரியின் மீது ஏறி, நடனமாடிய அஜித்தின் ரசிகன் ஒருவன், நிலை தடுமாறி கீழே விழுந்தான். 19 வயதேயான அந்த ரசிகன், முதுகு தடத்தில் அடிபட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தான். மற்றொரு சம்பவத்தில், விழுப்புரத்தில் கொரோனா நன்கொடை குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரஜினி-விஜய் ரசிகர்கள், விவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒருவர் இறந்து போனார். தமிழ் சினிமா ரசிகர்கள், தங்கள் வெள்ளித்திரை நாயகனை கடவுளாக பாவிக்கும் மனப்பாண்பையும், அதற்காக உயிரையும் துச்சமாக எண்ணி செய்யும் 'ஸ்டண்ட்'களையும், வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டிக்கின்றனர்.
வழிகாட்டுதல் பற்றாக்குறையே காரணம் என்கின்றனர் உளவியலாளர்
''Indianexpress'ல் இதுகுறித்து பேசிய எழுத்தாளர் சாரு நிவேதிதா, "பொழுதுபோக்கின் தரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. என் இளமைக் காலத்தில், எங்களுக்கு பத்திரிகை மற்றும் பொழுதுபோக்குக்கு வேறு சில வழிகள் இருந்தன. இப்போது, ரீல் தயாரிக்கும் தலைமுறை வந்துவிட்டது. அவர்களுக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை" என்று கூறுகிறார். உளவியலாளர் டாக்டர் மினி ராவ், "இளைஞர்களுக்கான கவனம் மற்றும் வழிகாட்டுதலின் பற்றாக்குறையே இதற்குக் காரணம். உளவியல் ரீதியாக, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியே இதற்குக் காரணம்", என்கிறார். "இத்தகைய வெறித்தனமான ரசிகனுக்கு மற்றொரு காரணம் சமூக ஊடகங்கள்", என்கிறார் இயக்குனர் சி.ஸ்.அமுதன். "இத்தகைய அச்சுறுத்தலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள், அரசாங்கம் மற்றும் நட்சத்திரங்களின் கூட்டு முயற்சி மட்டுமே தீர்வாக இருக்க முடியும்," என்றும் தெரிவித்துள்ளார்