
ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள்
செய்தி முன்னோட்டம்
சமீப காலங்களில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெறும் நடவடிக்கை இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. பல்வேறு அட்டகாசமான சலுகைகளை வழங்கப்படும் இந்த ஆன்லைன் குறுங்கடனில், ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.
எனவே, ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளில் கடன் வாங்கும் முன் இந்த ஆபத்துக்கள் எதுவும் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்வது நல்லது.
பதிவு செய்யப்படாத கடன் வழங்கும் தளம்:
பதிவு செய்யப்படாத தளத்தில் கடன் பெறுவதன் மூலம், நம்முடை தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்களுக்கு நாமே ஆபத்தை விளைவிக்கிறோம் என்று அர்த்தம்.
நாம் கடன் வாங்கும் தளம் அல்லது செயலியானது, ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட ஒன்றா என்பதை அறிந்து கொண்டு பின்னர் கடன் பெறுதல் நலம்.
கடன்
தீர ஆராயுங்கள்:
ஒரு ஆன்லைன் தளத்தில் கடன் வாங்கும் முன், அவர்கள் அளிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதையும் படித்த பின்பே வாங்க வேண்டும். இல்லையென்றால் நமக்கே தெரியாமல் கூடுதல் கட்டணங்களை நம் மீது அவர்கள் விதிக்கக்கூடும்.
தகவல் பாதுகாப்பு முக்கியம்:
ஒரு ஆன்லைன் தளத்தில் கடன் வாங்கும் முன், நம்மிடம் இருந்து என்ன விதமாக தகவல்களை அவர்கள் பெறுகிறார்கள், அதனை அவர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நம்முடைய தகவல் நம்முடையதல்ல.
பேராசை பெருநஷ்டம்:
மிகவும் குறைந்த வட்டியிலோ அல்லது நமது தகவல்கள் ஏதும் இன்றியோ ஒரு நிறுவனம் கடன் கொடுக்கிறதென்று உடனே வாங்கிவிடாதீர்கள். அவர்கள் கடனைத் திரும்பப் பெறும் அனுமுறை குறித்து நமக்குத் தெரியாது.