வெள்ளி தட்டில் விருந்து, ஸ்வீட் உடன் 500 ரூபாய் நோட்டு: களைகட்டிய அம்பானியின் விருந்து உபசரிப்பு
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி. இவர் சர்வதேச தரத்தில் இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு மாநாட்டு மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார். அந்த விழாவிற்கு, இந்தியாவில் இருக்கும் பிரபலங்கள் மட்டுமின்றி, ஹாலிவுட் நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். திறப்பு விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மகள் சௌந்தர்யாவும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர கலை நிகழ்ச்சி, பேஷன் ஷோ, பிரமாண்ட விருந்து என, அந்த விழா களைகட்டியது. அம்பானி வீட்டின் விசேஷம் என்றால் கேட்கவா வேண்டும்? அந்த விழாவின் விருந்து ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
வெள்ளி தட்டில் விருந்து சாப்பாடு
கலாச்சார மையத்தின் திறப்பு விழாவிற்கு கோடி கோடியாக செலவழித்த அம்பானி குடும்பம்
அதில், ஹல்வா கிண்ணத்துடன், ரூ.500 தாள்கள் வைக்கப்பட்டுள்ளது போல உள்ளது. நல்ல வேளை, அவை டம்மி நோட்கள். இது போக, வெள்ளித்தட்டில், ராஜபோக விருந்து நடைபெறுகிறது என அந்த வீடியோவின் பயனர் பதிவிட்டுள்ளார். ரொட்டி, பருப்பு, பாலக் பனீர், கறி, ஹல்வா, இனிப்பு பலகாரங்கள், பாப்பாட் மற்றும் லட்டு போன்ற பல இந்திய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுபோக, ஒரு கிளாஸ் ஒயின்னும் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 31 அன்று திறக்கப்பட்ட அந்த அரங்கத்தில், முதல் நாள், இந்தியாவின் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி, ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.