நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி நாட்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
நவராத்திரி பூஜைகள் என்பது இந்தியா முழுவதும் விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகையாகும். இந்த கொலு பூஜைகளின் போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம். கொலு வைத்து வணங்குபவர்கள் காலை, மாலை என்று இரு வேளையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். எந்த நாளுக்கும் எந்த நைவேத்தியம் படைக்க வேண்டுமோ அதை கண்டிப்பாக வரிசைப்படி செய்ய வேண்டும். கொலு வைக்காதர்களும் அம்மனின் உருவ படத்தை வைத்து இந்த பூஜைகளை செய்யலாம். பராசக்தி, அரக்கனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படும் விழா நவராத்திரி என்பதால், நவராத்திரியின் போது பெண்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் செய்லகளை செய்யக்கூடாது.
நவராத்திரி பூஜையின் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்:
நவராத்திரியின் 9 நாட்களும் வீடுகளில் சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கான பூஜை இது என்பதால், தினமும் சில பெண்களையும் சிறுமிகளையும் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் வழங்கி ஆசி பெற்றால், அம்பாளின் ஆசியும் உங்களுக்கு கிட்டும். நவராத்திரியின் போது வரும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு விருந்து வைத்து புடவையை பரிசாக அளிப்பது, சகல சௌபாக்யத்தையும் பெற்று தரும். அம்பாளுக்கு வைக்கும் நைவேத்தியத்தை ஏதாவது ஒரு சிறுமிக்கு சாப்பிட கொடுப்பது நல்லது. நைவேத்திய உண்வுகளில் பூண்டு, வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். நவராத்திரி பூஜை செய்பவர்கள் பகல் வேளையில் தூங்குவது நல்லதல்ல. கொலு வைக்கும் வீட்டில் உள்ளவர்கள் 9 நாட்களும் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது.