நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதம் இருப்பதனால் கிடைக்கும் பலன்கள்
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்களுக்கு, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், பெண்கள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டல் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். ஆனால் நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பது உங்களுக்கு மனதளவில் மட்டுமல்லாமல், உடல் அளவிலும் பல நன்மைகளை ஏற்படுத்தும். நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பது உங்கள் செரிமான அமைப்புக்கு சிறிய இடைவேளை அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் உடம்பில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் தூய்மை அடைகிறது. விரதம் இருப்பது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது ஹைபர் டென்ஷனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நவராத்திரி விரதம்
விரதம் இருப்பது வயிற்றுக்கு மட்டுமல்லாமல் இதயத்திற்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. விரதம் இதய செயல்பாட்டை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது. நவராத்திரி காலத்தில் நாம் விரதம் இருக்கும் போது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் தவிர்ப்போம். அப்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் அதிகரிப்பதை குறைக்க உதவுகிறது. விரத காலத்தில் சத்தான பழங்கள் மற்றும் நட்ஸ் உள்ளிட்டவற்றை உட்கொள்ளும் போது அது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சர்க்காடியன் ரிதம் மற்றும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்தி உங்களை நன்றாக உறங்க வைக்கிறது.
ஹார்மோன் சமநிலையை உண்டாக்கும் விரதம்
விரதம் இருப்பது நம் உடம்பில் உள்ள அனைத்து ஹார்மோன்களையும் சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக கூறப்படுகிறது. ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருப்பது மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நம்மால் மேம்படுத்த முடியும். நவராத்திரியில் விரதம் இருப்பது நம் உடம்பில் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் நம் ஆயுள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. விரதம் இருப்பது உடல் எடை மேலாண்மையை சரி செய்ய உதவுகிறது. விரதம் இருப்பதன் மூலம் உங்கள் எடை குறையும் எனவும் கூறப்படுகிறது.