
தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த விஷயங்களை மறக்காமல் தினமும் காலை செய்யுங்கள்
செய்தி முன்னோட்டம்
உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு, நிச்சயம் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், அதில் உள்ள கலோரிகளை எரிக்க என்னென்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறீர்கள் என்பதும் அதில் அடங்கும்.
இருப்பினும், வயிற்று பகுதியில் தேங்கும் தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. அதற்கு உங்களுக்கு உதவ சில குறிப்புகள் இதோ! இவற்றை தினசரி காலை தவறாமல் கடைப்பிடிப்பதால், உங்கள் தொப்பை சீக்கிரம் கரையும்.
முதலில், நீரேற்றம் இருக்க வேண்டும்: நீங்கள் எழுந்தவுடன், உங்கள் வயிற்றிற்குள் செல்லும் முதல் விஷயம் ஒரு பெரிய கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும். அது வெதுவெதுப்பான, எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தண்ணீராக இருந்தால் கூடுதல் நன்மை.
card 2
புரதம் மற்றும் நார் சத்துக்கள் நிரம்பிய உணவுகளை உண்ணுங்கள்
புரதம் நிறைந்த காலை உணவை சாப்பிடுங்கள்: புரத சத்து, உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்பதால், தினசரி காலை உணவில், புரதம் நிறைந்த முட்டை, தயிர், பன்னீர் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்: நார்சத்து உட்கொள்ளுவதால், உங்களுக்கு நீண்ட நேரம் பசிக்காது. அதனால், தேவையில்லாமல் சாப்பிடுவதை தவிர்க்கலாம். கூடுதலாக, நார்ச்சத்து, கொழுப்பு உருவாவதையும், வீக்கம் போன்ற பல இரைப்பை குடல் பிரச்சனைகளையும் தடுக்க உதவுகிறது.
காலையில் தியானம் செய்யவும்: உடல் எடை அதிகரிப்பதற்கும், உடலில் கொழுப்பு சேர்வதற்கும் மிகப்பெரிய காரணிகளில் ஒன்று மன அழுத்தம். உங்கள் ஸ்ட்ரெஸ்டாக இருக்கும்போது, கார்டிசோல் சுரக்கும். அது உங்கள் பசியை அதிகரிக்கிறது