மழையிலும், குளிரிலும், உங்கள் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பல பகுதிகளில், இன்னும் சில வாரங்களில் குளிர்காலம் துவங்க உள்ளது.
குளிர்காலம், வெயிலில் இருந்து நமக்கு நிவாரணம் அளித்தாலும், அது குளிர்ச்சியான, வறண்ட வானிலையை ஏற்படுத்தும். இதனால் தோல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், மந்தமான மற்றும் வறண்ட சருமம் உருவாகலாம்.
அதை தவிர்க்க, உங்கள் சருமத்தை, குளிர்காலம் வரும் முன்னரே, பராமரிப்பது அவசியமாகிறது.
அதன் மூலம் சரும ஆரோக்கியம் பராமரிக்கப்படும்.
குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க, இந்த எளிய தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றவும்.
card 2
எக்ஸ்ஃபோலியேட் செய்யவும்
பெரும்பாலும் இறந்த சரும செல்கள், உங்கள் தோல் பராமரிப்பு கிரீம்களின் செயல்பாடுகளை தடுக்கலாம்.
உங்கள் முகத்தை வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை வரை தவறாமல் எக்ஸ்ஃபோலியேட் செய்வது, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மிருதுவாக வைத்திருப்பதுடன், உங்கள் சருமப் பராமரிப்புப் பொருட்கள் சிறப்பாக சருமத்திற்கும் ஊடுருவ உதவுகிறது.
இது உங்கள் சீரம் மற்றும் மாய்ஸ்சரைசரின் சரும நன்மைகளை மேம்படுத்துகிறது.
குளிர்ந்த, வறண்ட குளிர்கால மாதங்களில், உங்கள் சருமம் போதுமான அளவு நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது.
card 3
மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்
குளிர்கால மாதங்கள் முழுவதும் உங்கள் சருமத்தைப் பாதுகாப்பது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.
மாய்ஸ்சரைசிங், உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும், ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும்.
வறண்ட காற்றை எதிர்த்துப் போராட, உங்கள் வழக்கமான மாய்ஸ்சரைசரை தவிர்த்து, நல்ல தரத்தில் இருக்கக்கூடிய, திக்கான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.
card 4
சன்ஸ்கிரீன் அவசியம்
குளிர்காலத்தில் வெயில் கடுமையாக இல்லாததால் சன்ஸ்கிரீன் தேவையில்லை என்று அர்த்தமல்ல.
பருவகாலத்தைப் பொருட்படுத்தாமல் புற ஊதா கதிர்கள் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரந்த-ஸ்பெக்ட்ரம் கொண்ட சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும்.
இதை உங்கள் கழுத்தும் கை, கால்கள் என சூரிய கதிர்கள் படும் இடங்களில் தடவ மறக்காதீர்கள்.
வெளியில் அதிக நேரம் செலவழித்தால் முடிந்தவரை உடலை கவர் செய்வது அவசியம்
card 5
நீரேற்றமாக இருங்கள்
குளிர்காலத்தில், தாகம் குறைவதால் நாம் அடிக்கடி தண்ணீர் உட்கொள்ளுவதை கவனிக்காமல் விடுகிறோம்.
தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். குளிர்ச்சியான வானிலை அதிக சூடான பானங்களை உட்கொள்ளத் தூண்டும் அதே வேளையில், அது உடலை நீரிழப்பு செய்யலாம்.
ஆரோக்கியமான சருமத்திற்கு நீரேற்றத்தை பராமரிப்பதிலும், pH அளவை சமநிலைப்படுத்துவதிலும், தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
குடிக்கும் நீருடன், வெள்ளரிகள், புதினா தழைகள் அல்லது எலுமிச்சையுடன் சேர்த்து ருசியாகவும் தண்ணீரை பருகலாம்.