Loading...
மழைக்கால ஆரோக்கிய குறிப்புகள்: வைரஸ் தொற்றுகள் மற்றும் டெங்குவிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிய வழிகள்
தமிழ்நாடு முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது

மழைக்கால ஆரோக்கிய குறிப்புகள்: வைரஸ் தொற்றுகள் மற்றும் டெங்குவிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிய வழிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 21, 2026
01:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்த ஆண்டு பருவமழைக்காலம் சற்று தாமதமாக தொடங்கினாலும், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில் டெங்கு, மலேரியா, டைபாய்டு, வைரஸ் தொற்றுகள் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

கடைபிடிக்க வேண்டியவை

மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை:

தண்ணீர் எளிதில் அசுத்தமடைய வாய்ப்புள்ளதால், எப்போதும் நன்கு கொதிக்கவைத்த நீரை அருந்துவது வயிறு சம்பந்தமான கோளாறுகளைத் தவிர்க்கும்.

தெருவோர உணவுகள், வெட்டப்பட்ட பழங்கள் மற்றும் நீண்ட நேரம் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, ஃபிரெஷான சூடான உணவை உட்கொள்ளுங்கள்.

சாப்பிடுவதற்கு முன்பும், வெளியிலிருந்து வந்த பிறகும் கைகளைச் சோப்பு போட்டு குறைந்தது 20 வினாடிகளுக்கு நன்றாகக் கழுவ வேண்டும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள், பச்சை காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெளியே செல்லும் போது குடை அல்லது ரெய்கோட் பயன்படுத்துவதோடு, வழுக்காத வாட்டர்ப்ரூஃப் காலணிகளை அணிவது நல்லது.

தவிர்க்க வேண்டியவை

மழைக்காலத்தில் செய்யக் கூடாதவை:

நீண்ட நேரம் ஈரமான ஆடைகள் மற்றும் காலுறைகளை அணிவது சளி மற்றும் பூஞ்சைத் தொற்றுகளை ஏற்படுத்தும். உடனே உலர்ந்த ஆடைகளுக்கு மாறவும்.

வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், குடிநீரை எப்போதும் மூடி வைக்க வேண்டும். இது கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கும்.

குளிர்ச்சியான காலநிலையிலும் தாகம் எடுக்கவில்லை என்றாலும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவங்களை அருந்த வேண்டும்.

மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதாலும், தோல் தொற்றுகள் ஏற்படக்கூடும் என்பதாலும் தேங்கிய நீரில் நடப்பதைத் தவிர்க்கவும்.

காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது கடுமையான உடல் வலி இருந்தால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

ADVERTISEMENT