
பணத்தை கையாளுவதற்கான சில டிப்ஸ்!
செய்தி முன்னோட்டம்
நிதி சார்ந்த விஷயங்களில் எப்படி திட்டமிடுவது என்பது குறித்த குழுப்பம் நம்மில் பலருக்கும் எப்போதும் இருந்து வருகிறது. எப்படித் திட்டமிட்டு நம் தேவைகளையும் பூர்த்தி செய்து, சேமிப்பிற்கும் வழிவகுப்பது?
தெளிவான நிதி இலக்குகள்:
நம்மால் அடைய முடிந்த நிதி இலக்குகளை வைத்துக் கொள்ளும் போது, அதனை நோக்கி பயணிப்பது எளிதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட கடனை அடைப்பது, ஒரு பொருளை வாங்குவதற்காக சிறிது நிதியை ஒதுக்குவது என திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
முக்கியமான செலவுகள் முதலில்:
முதலில் தேவையான செலவுகளுக்கான நிதியை ஒதுக்கிவிட்டு, மிச்சம் இருந்தால் ஆடம்பரச் செலவுக்குப் பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டுக்கான கடனை அடைப்பது, வாடகைகளைக் கொடுப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து மீதம் இருந்தால் ஷாப்பிங்கும் செய்யலாம்.
நிதி
கண்களுக்குத் தெரியாத செலவுகளை கட் செய்ய வேண்டும்:
நெட்பிலிக்ஸ் அல்லது ஏதோ ஒரு டிஜிட்டல் புத்தகத்திற்காக ஒரு மாதம் ஆட்டோமேட் செய்து வைத்திருப்போம். அதனைப் பயன்படுத்த கூட மாட்டோம். ஆனால், அதற்கான தொகை மட்டும் வங்கிக் கணக்கில் இருந்து சென்று கொண்டே இருக்கும். அதனை கட் செய்ய வேண்டும்.
பெரிய செலவுகளுக்கு சிறிய சேமிப்பு:
அனைவருக்குமே கார் அல்லது வீடு வாங்க வேண்டும் என மனதில் ஏதாவது ஒரு பெரிய செலவுக்கான திட்டம் வைத்திருப்போம். ஒவ்வொரு மாதமும் அதற்கா தொகையை தனியாக எடுத்து வைத்து விடுவது நல்லது.
பிரித்து செலவு செய்தல்:
மொத்தமாக பணத்தை வைத்து செலவு செய்தால் எவ்வளவு செலவு செய்தோம் என்பதே தெரியாது. எனவே, முதலிலேயே பணத்தை அந்தந்த செலவுக்கென பிரித்து செலவு செய்வது நல்லது.